மாற்றத்தை உருவாக்க தைரியம் தேவை: இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளிடையே மோடி உரையாடல்!

இந்திய விடுதலைக்கு வெகு காலத்துக்குப் பின் விடுதலை அடைந்த நாடுகள் கூட வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி, முன்னேற்றம் உள்ளிட்ட விசயங்களோடு ஒப்பிடுகையில் இந்தியாவை விடப் பலபடிகள் முன்னேறிய நிலையில் உள்ளன.
மாற்றத்தை உருவாக்க தைரியம் தேவை: இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளிடையே மோடி உரையாடல்!
Published on
Updated on
1 min read

புதுதில்லி: புதிதாகப் பதிவியேற்கவிருக்கும் இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளிடையே உரையாற்றிய இந்தியப் பிரதமர் மோடி; புதிய இந்தியாவை ஆற்றல் மிக்கதாக மாற்றப் போகும் நிர்வாக ரீதியிலான புதிய மாற்றங்களை எதிர்க்கக் கூடிய மனப்பான்மை உங்களில் யாருக்காவது இருக்குமானால் அதை மாற்றிக் கொள்ளுங்கள் என்று அறிவுரை கூறினார். 

இந்தியக் குடிமைப் பணிகளுக்கான இறுதிக் கட்டத் தேர்வில் 2015 ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்று உதவிச் செயலாளர் பதவிகளை ஏற்கவுள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை வாழ்த்தி அவர்களுக்கு பணி உத்தரவு வழங்கவிருந்த விழாவில் அவர்களை வரவேற்றுப் பேசும் போது மோடி இவ்விதம் கூறினார். அவர் குறிப்பிட்டதின் படி ‘இந்தியாவின் வளர்ச்சி விகிதம் சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து பிற நாடுகளோடு ஒப்பிடும் போது பின்தங்கிய நிலையிலேயே உள்ளது.’ என்பதாக மோடியின் உரை அமைந்திருந்ததாகக் கூறப்படுகிறது.

அரசு அதிகாரப்பூர்வ அறிக்கையின் படி, இந்திய விடுதலைக்கு வெகு காலத்துக்குப் பின் விடுதலை அடைந்த நாடுகள் கூட வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி, முன்னேற்றம் உள்ளிட்ட விசயங்களோடு ஒப்பிடுகையில் இந்தியாவை விடப் பலபடிகள் முன்னேறிய நிலையில் உள்ளன. மாற்றத்தை உருவாக்க தைரியம் தேவை. அதிகாரிகளின் கூட்டுத் திறன்களைப் பயன்படுத்த சிதறடிக்கப்பட்ட நிர்வாகம் எப்போதும் அனுமதிப்பதில்லை. இத்தகைய பயனற்ற நிர்வாக முறையை ஒழிக்க வலிமை வாய்ந்த மாற்றங்கள் தேவை. 

இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தங்களது பயிற்சிக் காலமான இந்த மூன்று மாதங்களுக்குள் அவரவர் உயரதிகாரிகளுடன் தயக்கமின்றி கலந்து பேசுங்கள். அப்போது தான் மூத்த அதிகாரிகளின் அனுபவமும், இளம் அதிகாரிகளின் செயல்திறனும் கூடிய ஒரு வலிமையான நிர்வாக அமைப்பை நம் நாடு பெற முடியும். என்று மோடி தன் வரவேற்புரையில் குறிப்பிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com