ஹரியானா மாநிலம் பரோலியைச் சேர்ந்த சஞ்சு என்ற பெண்மணிக்கும் அவரது கணவருக்குமிடையே சந்தேகத்தின் பேரில் முற்றிய குடும்பச் சண்டை ஒன்று கடைசியில் கொலை முயற்சியில் முடிந்தது. கடுமையான வாக்குவாதம் முற்றி மனைவியைக் கோடலியால் தாக்கிய கணவர் அங்கிருந்து தப்பி ஓட மனைவி ரத்த வெள்ளத்தில் தெரிவில் கிடந்தார். இதைக் கண்டு பயந்து போன அவர்களது மூன்று குழந்தைகள் செய்வதறியாது திகைக்க உதவ வேண்டிய அண்டை வீட்டுக்காரர்களோ முதலுதவி செய்யத் தோதான அந்தப் பொன்னான நிமிடங்களை வீணடித்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சஞ்சுவின் மரணப் போராட்டத்தை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர். இதைக் கண்டு யாரோ காவல்துறைக்கு இந்த அவலத்தை எடுத்துரைக்க விரைந்து வந்தனர் காவலர்கள்.
காவலர்களில் ஒருவரான ராம் மெஹர் இந்த அவலம் குறித்து கூறுகையில், ” “பாதிக்கப்பட்ட பெண்மணி தரையில் கிடந்து “ என் ரத்தம் வெளியேறிக் கொண்டே இருக்கிறது... என் உயிர் போய்க் கொண்டு இருக்கிறது... என்னை யாராவது காப்பாற்றுங்களேன்... காப்பாற்றுங்களேன் ” என்று தீனமாகக் கதறிக் கொண்டிருக்கிறார். அதைக் கேட்ட பின்னும் அங்கிருப்போர் எவரும் அவருக்கு முதலுதவி அளிக்காமல் அவரது மரண அவஸ்தையை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார்கள். நாங்கள் அந்த இடத்தை அடையும் போது இது தான் அங்கே நிகழ்ந்து கொண்டிருந்தது. காவலர்களான எங்களைப் பொறுத்தவரை பொது மக்களிடம் ஒரே ஒரு வேண்டுகோள் உள்ளது. தயவு செய்து ஒரு உயிர் ஆபத்தில் இருக்கையில் அதை ஆவணப் படுத்துவதை விட காக்க முயல்வது தான் முக்கியம் ... என்பதை மக்கள் உணர வேண்டும்.” என்றார்.
Image courtsy: Times of india
Related Article
மீண்டும் உக்ரைனிலிருந்து உலகை உலுக்க புறப்பட்டு வந்திருக்கிறது புதிய மால்வேர்!
மனிஷாவுடன் அமைதியாக உணர்கிறேன்... ரோப் கார் விபத்தில் இறந்தவரின் இறுதி முகநூல் ஸ்டேட்டஸ்!
நடுவானில் இயந்திரக் கோளாறு காரணமாக தரையிறக்கப் பட்ட விமானம்!
லடாக்கில் மைனஸ் 25 டிகிரி செல்ஸியஸ் குளிரில் யோகப் பயிற்சி செய்த இந்திய ராணுவ வீரர்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியை விரும்பும் மக்கள்: திருமாவளவன் கருத்து!

புதிய வரலாறு! திருவண்ணாமலை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் அதிமுக வெற்றி!
4 தொகுதிகளில் வெற்றி... தமிழக மக்களுக்கு நன்றி: அன்புமணி இராமதாஸ் அறிக்கை!

புதுவைப் பேரவைத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த தலைவர்கள்!
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


