/

பங்கிப்பூரில் 64 ஆயிரம் வாக்குகளுடன் பிரசாந்த் கிஷோர் வரலாற்று வெற்றி!

31 ஆண்டுகளாக பாஜகவின் கோட்டையாக இருந்த பங்கிப்பூரில் பாஜக வேட்பாளர் நீரஜ் குமாரை பிரசாந்த் கிஷோர் தோற்கடித்தது குறித்து...

News image

பிரசாந்த் கிஷோர் - பிடிஐ

Updated On :3 ஆகஸ்ட் 2026, 10:18 pm IST

பிகாரில் இடைத்தேர்தல் நடைபெற்ற பங்கிப்பூர் தொகுதியில் ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

31 ஆண்டுகளாக பாஜகவின் கோட்டையாக இருந்த பங்கிப்பூரில் பாஜக வேட்பாளர் நீரஜ் குமாரை தோற்கடித்து வரலாற்று வெற்றியை பிரசாந்த் கிஷோர் பதிவு செய்துள்ளார்.

பாஜக தேசிய தலைவர் நிதின் நவீன் மாநிலங்களவை உறுப்பினராக ஆவதற்கு தனது பங்கிப்பூர் தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார். அதன் விளைவாக அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இதன் பிறகு கடந்த ஜூலை 30 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. பங்கிப்பூருடன் குஜராத்தின் மஞ்சள்பூர், மத்திய பிரதேசத்தின் ததியா தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது.

இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில் பங்கிப்பூர் தொகுதியில் ஆரம்பம் முதலே பிரசாந்த் கிஷோர் முன்னிலை பெற்றுவந்தார்.

நடைபெற்ற இடைத்தேர்தலில் முதல்முறையாக போட்டியிட்ட பிரசாந்த் கிஷோர், 31 ஆண்டுகளாக பாஜவின் கோட்டையாக இருந்த தொகுதியில் தனது வெற்றியைத் தொடங்கியுள்ளார்.

மொத்தமுள்ள 31 சுற்றுகளில் 24 -வது சுற்று முடிவில் பாஜக வேட்பாளர் நீரஜ் குமாரைவிட 13,868 வாக்குகள் வித்தியாசத்தில் பிரசாந்த் கிஷோர் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார்.

தற்போது தேர்தல் ஆணையத்தில் இணையதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலின்படி, 64,151 வாக்குகள் பெற்று பிரசாந்த் கிஷோர் வெற்றி பெற்றார். பாஜக சார்பில் போட்டியிட்ட நீரஜ் குமார் 44,827 வாக்குகளை மட்டுமே பெற்றார்.

இதேபோன்று குஜராத்தின் மஞ்சள்பூர் தொகுதியில் பாஜகவின் சத்யேந்திரபாய் படேல், மத்திய பிரதேசத்தின் ததியா தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் கன்ஷியாம் சிங் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

Summary

Prashant Kishor achieves a historic victory in Bankipur with 64,000 votes

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.