ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

தமிழக அமைச்சர் சுவாமி தரிசனம்

தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சனிக்கிழமை மூகாம்பிகை கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

News image
Updated On :5 ஜனவரி 2013, 10:39 pm

தினமணி

தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சனிக்கிழமை மூகாம்பிகை கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

 சென்னையில் இருந்து சனிக்கிழமை காலை 8.45 மணிக்கு விமானம் மூலம் கர்நாடக மாநிலம், மங்களூர் வந்த அவர், கார் மூலம் குந்தாபுரா வட்டத்தில் அமைந்துள்ள மூகாம்பிகை கோயிலுக்குச் சென்றார். தனது உதவியாளருடன் வருகை தந்திருந்த செந்தில் பாலாஜி, சிறப்பு பூஜை செய்து சுவாமி தரிசனம் செய்து வழிபட்டார். கோயில் நிர்வாகத்தின் சார்பில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், மாலை 4 மணிக்கு விமானம் மூலம் சென்னை திரும்பினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.