பெங்களூர் ஜவஹர்லால் நேரு கோளரங்கத்தில் மே 21-ம் தேதி தொடங்க உள்ள கோடை அறிவியல் கருத்தரங்கத்தில் மாணவர்கள் பங்கேற்கலாம்.
ஜவஹர்லால் நேரு கோளரங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்கும் விதமாக, இக்கோளரங்கம் சார்பில், கோடை அறிவியல் கருத்தரங்கை நடத்த உள்ளது. இந்த கருத்தரங்கம், மே 21-ம் தேதி தொடங்கி, ஜூன் 1-ம் தேதி வரை, காலை 10.30 முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். இதில் பியூசி, பி.எஸ்சி மாணவர்கள் பங்கேற்கலாம். இந்த கருத்தரங்கில், பல்வேறு முன்னணி ஆராய்ச்சி நிறுவனங்களைச் சார்ந்த வல்லுநர்கள் பங்கேற்று, கருத்துரை வழங்க உள்ளனர். இதில் பங்கேற்க விரும்புவோர், தங்கள் பெயரை முன்பதிவுசெய்துக்கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு 080- 22379725 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்புகொண்டோ, www.taralaya.org என்ற இணையதளத்தில் பார்த்தோ தெரிந்துகொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிரதமர் மோடி சென்ற பாதையில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுப்பு: 6 காவலர்கள் பணியிடை நீக்கம்

தொடரும் பாலியல், கொலை... முதல்வர் ஜோசப் விஜய்யின் வீரவசனம் என்ன ஆனது? - டிடிவி தினகரன் கேள்வி

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே சிறுவன் வெட்டிக் கொலை!

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


