சிஜேபி அபிஜீத் தீப்கே கைதுக்கு ராகுல் கண்டனம்ரயில்வே பணியாளர்களுக்கு தீபாவளி போனஸாக 78 நாள்களுக்கான ஊதியம் வழங்கப்படும்!ரூ. 30 லட்சம் வரை நீண்ட காலக் கடன்கள் வழங்கப்படும்: கூட்டுறவுத்துறை அறிவிப்பு!சென்னை ஒக்கியம் மடுவு பகுதியில் மழைநீர் வடிகால் பணிகள்: முதல்வர் விஜய் ஆய்வு!சகோதரியாக எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்: சிஜேபியினர் கைதுக்கு மமதா கண்டனம்!ஜனநாயகப் படுகொலையின் முதல் குற்றவாளி மு.க. ஸ்டாலின்! ஆதவ் அர்ஜுனா

மணல் கொள்ளையில் ஈடுபட்டிருந்தால் என் மகனைத் தண்டிப்பேன்

மணல் கொள்ளையில் ஈடுபட்டிருப்பது நிரூபிக்கப்பட்டால், என் மகன் மற்றும் அமைச்சர் மகாதேவ பிரசாத்தை தூக்கிலிட்டுத் தண்டிப்பேன் என முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

Updated On :

மணல் கொள்ளையில் ஈடுபட்டிருப்பது நிரூபிக்கப்பட்டால், என் மகன் மற்றும் அமைச்சர் மகாதேவ பிரசாத்தை தூக்கிலிட்டுத் தண்டிப்பேன் என முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, மைசூரு விமான நிலையத்தில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: எனது மகனும், கூட்டுறவுத் துறை அமைச்சர் மகாதேவ பிரசாத்தும் மணல் கொள்ளையில் ஈடுபட்டுவருவதாக சட்டமேலவை எதிர்க்கட்சித் தலைவர் கே.எஸ்.ஈஸ்வரப்பா குற்றம் சாட்டியுள்ளார்.

இதுபோன்ற, கீழ்த்தரமான அரசியல் விமர்சனத்தை இதுவரை யாரும் செய்தது கிடையாது. என் மகனும், அமைச்சர் மகாதேவ பிரசாத்தும் எந்தவகையான மணல் கொள்ளையிலும் ஈடுபடவில்லை. ஒருவேளை மணல் கொள்ளையில் ஈடுபட்டிருப்பதாக நிரூபிக்கப்பட்டால், இருவரையும் தூக்கிலிட்டுத் தண்டிப்பேன். எனவே, இதுபோன்ற கீழ்த்தரமான விமர்சனங்களுக்கு செவிசாய்க்க வேண்டிய அவசியமில்லை.

கர்நாடகத்தில், 40 ஆண்டுகளுக்குப் பிறகு மிகவும் மோசமான வறட்சி ஏற்பட்டுள்ளது. நிகழாண்டில், தென்மேற்கு பருவமழை வழக்கத்தைவிட 28 சதவிகிதம் குறைந்துள்ளது. இதனால், கர்நாடகத்தில் ரூ.3,800 கோடி மதிப்பிலான பயிர்கள் நாசமாகியுள்ளன.

தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிதி உதவி வழங்குமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் நேரில் மனு அளித்திருந்தோம். ஆனால், மத்திய அரசு இதுவரை ஒரு ரூபாய் கூட கர்நாடகத்துக்கு நிதி வழங்கவில்லை.

கர்நாடகத்தில் நிலவும் வறட்சி, பயிர் நாசம், இழப்பீட்டுத் தொகை ஆகியவை குறித்து பிரதமர் நரேந்திர மோடியை செவ்வாய்க்கிழமை (செப்.15) நேரில் சந்தித்து அறிக்கை அளிக்க, வருவாய்த் துறை அமைச்சர் சீனிவாஸ் பிரசாத், விவசாயத் துறை அமைச்சர் கிருஷ்ண பைரே கெளடா ஆகிய இருவரும் புதுதில்லி செல்கின்றனர்.

வறட்சி நிலையை எதிர்கொள்ள கர்நாடக அரசு போர்க்கால அடிப்படையில் ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

கலசா-பண்டூர் கால்வாய்த் திட்டத்துக்கு அனுமதி கோரி, பிரதமர் நரேந்திர மோடியை கர்நாடக அனைத்துக் கட்சி குழுவினர் சந்தித்தபோது, மத்திய அமைச்சர்கள் அனந்த்குமார், சதானந்த கெளடா, முன்னாள் முதல்வர் எடியூரப்பா உள்ளிட்டோர் வாய் திறக்கவில்லை. இப்போது, கர்நாடக அரசைக் குறைகூறிப் பேசி வருகிறார்கள்.

பயிர்க் கடனை தள்ளுபடி செய்யும்படி பாஜக முன்னாள் முதல்வர் எடியூரப்பா கூறியிருக்கிறார்.

மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக, தேசிய வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனை முதலில் தள்ளுபடி செய்யட்டும். அதன் பிறகு, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடனைத் தள்ளுபடி செய்கிறோம்.

பெங்களூரு மாநகராட்சியை பாஜகவினரிடம் இருந்து காப்பாற்றவே தவிர்க்க முடியாமல் மஜதவுடன் கூட்டணி அமைத்துள்ளோம். காங்கிரஸ்-மஜத கூட்டணியை விமர்சிக்கும் தார்மிக உரிமை பாஜகவுக்கு இல்லை என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.