விவசாயிகள் மீதான தடியடி தாக்குதல் குறித்து கர்நாடக சட்டப்பேரவையில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது.
கர்நாடக சட்டப்பேரவை வெள்ளிக்கிழமை கூடியதும் எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர், பெங்களூரில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது தடியடி தாக்குதல் நடத்தியது குறித்து பிரச்னையை எழுப்பினர். நிலையான குடிநீர் கேட்டு கோலார், சிக்பளாப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பெங்களூரில் வியாழக்கிழமை அமைதியான முறையில் போராட்டம் நடத்தமுற்பட்டனர்.
இதுபற்றி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தும், சரியான முன்னேற்பாடுகளைச் செய்யாததால், விவசாயிகள் போராட்டத்தை மாநில காவல் துறையால் சரியாகக் கையாள முடியவில்லை. போராட்டம் நடத்துவதற்காக வந்த விவசாயிகளைத் தடியடி நடத்தி கலைத்தது சரியல்ல. காங்கிரஸ் அரசு, விவசாயிகளுக்கு எதிராகச் செயல்படுகிறது.
இதுகுறித்து ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டுவந்து விவாதிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று பேரவைத் தலைவர் காகோடு திம்மப்பாவைக் கேட்டுக் கொண்டார்.
இதற்கு கடுமையாக ஆட்சேபம் தெரிவித்த முதல்வர் சித்தராமையா, பெங்களூரில் விவசாயிகள் நடத்திய போராட்டம் குறித்து விவாதிக்கவும், அறிக்கை தாக்கல் செய்யவும் மாநில அரசு தயாராக உள்ளது.
எனது அரசு விவசாயிகளுக்கு எதிரானது அல்ல. சிக்பளாப்பூர், கோலார் மாவட்ட விவசாயிகளை ஏற்கெனவே சந்தித்துப் பேசியுள்ளேன். மார்ச் 6-ஆம் தேதி மீண்டும் விவசாயிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தவிருக்கிறேன். முந்தைய பாஜக ஆட்சிக் காலத்தில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. விவசாயிகள் நலன் காக்கும் விவகாரத்தில் பாஜகவிடம் இருந்து பாடம் கற்கும் அவசியம் எங்களுக்கில்லை என்றார்.
இதற்கு பா.ஜ.க.வினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அப்போது ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் நடைபெற்றது. இதனிடையே, முதல்வர் சித்தராமையாவும் எதிர்க்கட்சித் தலைவர் ஜெகதீஷ் ஷெட்டரும் வார்த்தைப் போரில் ஈடுபட்டனர். அப்போது அவையில் கூச்சல், குழப்பம் நிலவியது. மாநில அரசின் போக்கைக் கண்டித்து பா.ஜ.க., ம.ஜ.த. உறுப்பினர்கள் பேரவைத் தலைவர் இருக்கை முன்பு கூடி தர்னா போராட்டம் நடத்தினர். விவசாயிகள் மீதான தடியடிக்கு முதல்வர் சித்தராமையா பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று முழக்கமிட்டனர். அப்போது குறுக்கிட்ட பேரவைத் தலைவர் காகோடு திம்மப்பா, ஒத்திவைப்பு தீர்மானம் அல்ல, விதி 69-இன் கீழ் விவாதிக்க அனுமதிப்பதாகத் தெரிவித்தார். இதை ஏற்றுக்கொண்ட பா.ஜ.க., ம.ஜ.த. உறுப்பினர்கள் தர்னா போராட்டத்தை திரும்பப் பெற்று அவரவர் இருக்கைக்குத் திரும்பினர்.
இதைத் தொடர்ந்து, காங்கிரஸ், பா.ஜ.க., ம.ஜ.த. உறுப்பினர்கள் பலர் பேசினர். விவாதத்தின் முடிவில் உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வர் விளக்க அறிக்கையைத் தாக்கல் செய்தார்.
அப்போது குறுக்கிட்ட முதல்வர் சித்தராமையா, விவசாயிகள் மீது தடியடி நடத்தவேயில்லை, மாறாக தள்ளுமுள்ளு ஏற்பட்டது அவ்வளவுதான். எங்கள் அரசு விவசாயிகளின் நலன் காக்கும் அரசு என்று கூறினார்.
முதல்வர் சித்தராமையாவின் விளக்கத்துக்கு கடும் ஆட்சேபம் தெரிவித்த பா.ஜ.க., ம.ஜ.த. உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்புச் செய்தனர்.
இதே விவகாரம் சட்டமேலவையிலும் எதிரொலித்தது. அங்கும் அரசின் நிலைப்பாட்டைக் கண்டித்து பா.ஜ.க., ம.ஜ.த. உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இரவு 10 மணி வரை சென்னை, 16 மாவட்டங்களில் மழை!

4 நாள்களில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் வசூல்?

பதின் வயதினருக்கான சாட்ஜிபிடி ஏஐ அறிமுகம்!

நடக்கும் கொலைகளுக்கு குறிப்பிட்ட ஆட்சி பொறுப்பாகாது! திருமாவளவன் எம்.பி. பேட்டி
விடியோக்கள்


