பேருந்தில் பயணச்சீட்டு பெறாதவர்களிடம் அபராதமாக ரூ.11.84 லட்சம் வசூல்

பேருந்தில் பயணச்சீட்டு பெறாதவர்களிடம் அபராதமாக ரூ.11.84 லட்சம் வசூலிக்கப்பட்டது.
Updated on
1 min read

பேருந்தில் பயணச்சீட்டு பெறாதவர்களிடம் அபராதமாக ரூ.11.84 லட்சம் வசூலிக்கப்பட்டது.
இதுகுறித்து பெங்களூரு மாநகரப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மக்களின் நலன்கருதி பெங்களூரில் போக்குவரத்துக் கழகம் சார்பில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்துகளில் பயணச்சீட்டு சோதனை கடந்த அக்டோபர் மாதத்தில் நடத்தப்பட்டது. 24,035நடைகளில் சோதனை நடத்தியதில் போக்குவரத்துக் கழகத்துக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாக 3035 சம்பவங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
அதனடிப்படையில், பயணச்சீட்டில்லாமல் பயணித்த 7,586 பேரிடம் அபராதமாக ரூ.11,84,330 வசூலிக்கப்பட்டது. வருவாய் இழப்பு ஏற்படுத்திய ஓட்டுநர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதே காலக்கட்டத்தில், பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் அமர்ந்துபயணம் செய்த  726 ஆண் பயணிகளிடமிருந்து அபராதமாக ரூ.72,600 வசூலிக்கப்பட்டுள்ளது. பேருந்து பயணச்சீட்டு சோதனையின் போது பரிசோதகர்களிடம் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com