பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

பெங்களூரு பல்கலை. எம்.பி.ஏ. தேர்வு முடிவுகள் அறிவிப்பு

பெங்களூரு பல்கலைக்கழகம் நடத்திய எம்.பி.ஏ., எம்.பிஎட்., எம்.சி.ஏ. தேர்வுமுடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

News image
Updated On :12 அக்டோபர் 2017, 4:19 am

DIN

பெங்களூரு பல்கலைக்கழகம் நடத்திய எம்.பி.ஏ., எம்.பிஎட்., எம்.சி.ஏ. தேர்வுமுடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து பெங்களூரு பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெங்களூரு பல்கலைக்கழகம் சார்பில் கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்ட எம்பிஏ முதுநிலைப் பட்டப்படிப்பின் 4-ஆவது செமஸ்டர், எம்சிஏ முதுநிலைப் பட்டப்படிப்பின் 6-ஆவது செமஸ்டர் மற்றும் எம்பிஎட் முதுநிலைப் பட்டப் படிப்பின் 4-ஆவது செமஸ்டர் தேர்வு முடிவுகள்
அறிவிக்கப்பட்டுள்ளன.
சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வர்கள், பெங்களூரு பல்கலைக்கழகத்தின் தேர்வுமையத்தில் இருந்து தேர்வுமுடிவுகளை பெற்றுச் சென்று மாணவர்களுக்கு அறிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விடைத்தாள்களின் நகல் பெறவும், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கவும் அக்.31-ஆம் தேதி கடைசிநாளாகும்.
இதற்கான பட்டியலை தயார் செய்து கல்லூரிகள் பல்கலைக்கழகத்திற்கு அக்.25-ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும். இந்த தேர்வு முடிவுகளை w‌w‌w.​b​a‌n‌g​a‌l‌o‌r‌e‌u‌n‌i‌v‌e‌r‌s‌i‌t‌y.​a​c.‌i‌n என்ற இணையதளத்தில் காணலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.