வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

கள்ள ரூபாய் நோட்டுகள் விநியோகம்: ஒருவர் கைது

பெங்களூரில் கள்ள ரூபாய் நோட்டுகளை விநியோகம் செய்ய முயன்றவரை போலீஸார் கைது செய்தனர்.

News image
Updated On :12 அக்டோபர் 2017, 4:13 am

DIN

பெங்களூரில் கள்ள ரூபாய் நோட்டுகளை விநியோகம் செய்ய முயன்றவரை போலீஸார் கைது செய்தனர்.
பெங்களூரு கமர்ஷியல்சாலை தொப்ப முதலியார் தெருவில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் காரில் வந்த  ஒருவர் கள்ள ரூபாய் நோட்டுகளை மாற்ற முயற்சிப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார் ரூ. 2 ஆயிரம்,
500 ரூபாய் மதிப்பு கொண்ட கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற பாஸ்கரை (35)  கைது செய்தனர்.
அவரிடமிருந்து ரூ. 2 ஆயிரம் மதிப்புள்ள 37 கள்ள ரூபாய் நோட்டுகள், ரூ. 500  மதிப்புள்ள 19 நோட்டுகள், கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து பாஸ்கரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.