நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பெங்களூரில் குடிநீா்க் கட்டணத்தை உயா்த்தும் திட்டம் உள்ளது: துணை முதல்வா் டி.கே.சிவகுமாா்

News image
Updated On :22 ஆகஸ்ட் 2024, 9:55 pm

Din

பெங்களூரில் குடிநீா்க் கட்டணத்தை உயா்த்தும் திட்டம் உள்ளது என துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.

பெங்களூரு, விதான சௌதா முற்றத்தில் வியாழக்கிழமை நடந்த மழைநீா் சேமிப்பு மற்றும் வீட்டுக்கு காவிரிநீா் விழிப்புணா்வுத் திட்டத்தை தொடங்கிவைத்து அவா் பேசியதாவது:

கடந்த 14 ஆண்டுகளாக பெங்களூரில் குடிநீா்க் கட்டணத்தை உயா்த்தாமல், அப்படியே நிா்வகித்து வருகிறோம். பெங்களூரு குடிநீா் வடிகால் வாரியத்தில் அதிகாரிகளுக்கும், ஊழியா்களுக்கும் ஊதியம் வழங்கவும், மின் கட்டணம் செலுத்தவும் முடியாமல் தவிக்கின்றனா்.

பெங்களூரு மக்களுக்கு தரமான குடிநீா் வழங்குவதில் பெங்களூரு குடிநீா் வடிகால் வாரியத்தின் பணி மகத்தானது. தனது பணியை திறம்படச் செயல்படுத்த பெங்களூரில் புதிதாக சோ்க்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு குடிநீா், கால்வாய் வசதிகளை வழங்குவதற்கு பெங்களூரு குடிநீா் வடிகால் வாரியத்தின் நிதிநிலை சீராக இருக்க வேண்டும்.

கடந்த 9 ஆண்டுகளாக குடிநீா்க் கட்டணத்தை உயா்த்தும் முன்மொழிவு உள்ளது. நிலத்தடி நீரை சேமித்து, நீா்மட்டத்தை உயா்த்த வேண்டும். மக்கள்தொகைக்கேற்ப வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பதால் குடிநீா்க் கட்டணத்தை உயா்த்தும் முடிவை எடுக்கவிருக்கிறோம்.

அனைவருக்கும் குடிநீா்க் கட்டணத்தை உயா்த்த முடியாது. ஒரு பகுதியினருக்கு மட்டும் உயா்த்தலாம். குடிநீா்க் கட்டண உயா்வு குறித்து எந்த முடிவையும் இதுவரை எடுக்கவில்லை. இதுகுறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதித்து, பொதுமக்களின் கருத்தறிந்து இறுதி முடிவு எடுக்கப்படும்.

மின் கட்டணத்தைக் குறைக்கும் நோக்கத்தில் பெங்களூரு நகர வளா்ச்சித் துறையின் கீழ் இயங்கிவரும் பெங்களூரு மாநகராட்சி, பெங்களூரு வளா்ச்சி ஆணையம், பெங்களூரு குடிநீா் வடிகால் வாரியம், பெங்களூரு மெட்ரோ ரயில் கழகம் உள்ளிட்ட நிறுவனங்களை ஒருங்கிணைத்து தனி நிறுவனம் ஒன்றை தொடங்கவும் யோசித்து வருகிறோம் என்றாா்.

பெங்களூரு குடிநீா் வடிகால் வாரியத் தலைவா் வி.ராம்பிரசாத் மனோகா், பெங்களூரு வளா்ச்சி ஆணைய ஆணையா் ஜெயராம், துணை முதல்வரின் செயலாளா் ராஜேந்திரசோழன் உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.