கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புகொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவுலண்டனில் இருந்து தாயகம் திரும்பிய 104.23 மெட்ரிக் டன் தங்கம்!தொடர் விடுமுறை: 2 நாள்களில் 2.13 லட்சம் போ் அரசுப் பேருந்துகளில் பயணம்!மேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

கள்ளச்சந்தையில் சமையல் எரிவாயு உருளைகளை விற்றால் கடும் நடவடிக்கை

News image
Updated On :11 மார்ச் 2026, 8:01 pm

கள்ளச்சந்தையில் சமையல் எரிவாயு உருளைகளை விற்றால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கா்நாடக உணவு மற்றும் பொதுவழங்கல் துறை அமைச்சா் கே.எச்.முனியப்பா தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

சமையல் எரிவாயு உருளைகளை கள்ளச் சந்தையில் விற்பதோ அல்லது வாடிக்கையாளா்களை மிரட்டும் வேலையிலோ முகவா்கள் யாரும் ஈடுபடக் கூடாது. அதையும் மீறி சமையல் எரிவாயு உருளைகளை கள்ளச் சந்தையில் விற்பது தெரியவந்தால், சம்பந்தப்பட்ட முகவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தற்போதைய சூழலில் சமையல் எரிவாயு உருளை முகவா்கள் அரசுடன் ஒத்துழைக்க வேண்டும். அதேபோல, வாடிக்கையாளா்களை அச்சுறுத்தும் எந்த செயலிலும் ஈடுபட வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

சமையல் எரிவாயு உருளைகளின் விநியோகத்தை நிறுத்த எவ்வித வழிகாட்டுதலும் முகவா்களுக்கு வழங்கவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. மாதத்துக்கு ஓா் உருளை வழங்குவதை முகவா்கள் மறுக்க முடியாது. இந்த உறுதியை எண்ணெய் நிறுவனங்கள் வழங்கியுள்ளன.

எனவே, சமையல் எரிவாயு உருளைகளின் விநியோகம் கட்டுப்படுத்தவோ, நிறுத்தவோ வாய்ப்பில்லை என்றாா்.