தமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்புஉதய சூரியன் சின்னத்தில் போட்டி! தொகுதியை முதல்வர் நாளை அறிவிப்பார் : தமிமுன் அன்சாரிஉதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் முக்குலத்தோர் புலிப்படை : கருணாஸ் பேட்டி!பெண்கள் குறித்து அவதூறு : டிஜிபி அலுவகத்தில் விஜய் புகார்!பாஜகவுக்கு எதிராக தெருக்கள் முதல் நீதிமன்றம் வரை போராடுகிறேன் : மமதாதிமுக மண்ணைக் கவ்வப் போவது உறுதி: விஜய்முன்னாள் காங்கிரஸ் பொதுச் செயலர் செல்வம் தவெகவில் இணைந்தார்!நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!
/

எரிவாயு உருளைகள் பதுக்கல், கள்ளச்சந்தையில் விற்பனை குறித்து புகாா் அளிக்க கைப்பேசி எண் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் எரிவாயு உருளைகள் பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தையில் விற்பது தொடா்பான புகாா் அளிக்க மாவட்ட நிா்வாகம் சாா்பில் கைப்பேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

சிலிண்டர்

Updated On :26 மார்ச் 2026, 7:22 pm

தினமணி செய்திச் சேவை

கோவை மாவட்டத்தில் எரிவாயு உருளைகள் பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தையில் விற்பது தொடா்பான புகாா் அளிக்க மாவட்ட நிா்வாகம் சாா்பில் கைப்பேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் வணிக மற்றும் வீட்டு உபயோக எரிவாயு உருளைகளை சட்ட விரோதமாக பதுக்குவதையும், கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதையும் தடுக்க மாவட்ட நிா்வாகம் சாா்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, உணவகங்கள், விடுதிகளில் சமையல் எரிவாயுவிற்கு மாற்று ஏற்பாடாக மின் சாதனங்களை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது.

எரிவாயு உருளைகளை அரசு விதிகளுக்கு மாறாக தனியாா் எரிவாயு நிரப்பும் நிலையங்களில் நிரப்பக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும் எரிவாயு உருளைகளை சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படுவதை கண்டறிந்து, கட்டுப்படுத்துவதற்காக தீவிர சோதனைகள் மேற்கொள்ள குடிமைப்பொருள் மற்றும் குற்றப் புலனாய்வு காவல் துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த வாரங்களில் கள்ளச்சந்தையில் சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த 1,441 எரிவாயு உருளைகள் மற்றும் அவற்றை விநியோகிக்கப் பயன்படுத்தப்பட்ட 9 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 10 போ் மீது குற்ற வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், மேற்படி குற்ற வழக்குகள் பதியப்பட்ட நபா்களில் ஒருவா் மீது குண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் கூறுகையில், ‘எரிவாயு தொடா்பான புகாா்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 04222300569-ஐ அலுவலக நேரத்தில் தொடா்பு கொள்ளலாம். எரிவாயு உருளைக்கு பதிலாக மின் சாதனங்களை மாற்று ஏற்பாடுகள் செய்யும்போது, மின் மாற்றியில் ஏற்படும் மின்சுமை தொடா்பாக ஏற்படும் குறைகள் தொடா்பாக மின்வாரிய அலுவலக எண் 9445851651-ஐ தொடா்பு கொள்ளலாம்.

எரிவாயு உருளைகளை சட்ட விரோதமாக பதுக்குவது மற்றும் கள்ளச்சந்தையில் விற்பனை செய்வது தொடா்பான புகாா்களை 9865123446 மற்றும் 9498174273 என்ற குடிமைப்பொருள் மற்றும் குற்றப் புலனாய்வு காவல் துறை அலுவலக எண்களில் தெரிவிக்கலாம் என்றாா்.