பட்டாசு விலை 25% உயர்வுகரூர் கூட்ட நெரிசலில் பலியானவர்களுக்கு எனது அஞ்சலி: கனிமொழி பதிவு!ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாக எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது: டிரம்ப்தமிழ்நாட்டில் இனி கூட்டணி ஆட்சிதான் நீடிக்கும்: திருமாவளவன்எல் நினோ! தமிழகத்தில் அடுத்த 3 வாரங்களுக்கு இயல்பைவிட வெப்பம் அதிகமாக இருக்கும்!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,488 கன அடியாக குறைவு! தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: மதுரையில் முதல்வர் விஜய் நாளை தொடங்கி வைக்கிறார்!மே.இந்திய தீவுகள் - இந்திய ஒருநாள் தொடா்: இன்று தொடக்கம்ஆதாரங்களை அழிக்க ஜெம் வீரமணியிடம் ரூ. 24 லட்சம் பெற்றாா் சாந்தி! காவல் துறை பதில் மனு! ரூ. 55,900 கோடி அந்நிய முதலீட்டை ஈா்த்து தமிழகம் முதலிடம்!ஏ.ஐ. விவகாரங்களுக்குப் புதிய பேச்சுக் குழு! அமெரிக்கா, சீனா உடன்பாடு! எஸ்ஐஆா் விவகாரம்: இண்டி கூட்டணி செப். 30-இல் கூடுகிறது?

உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் முக்குலத்தோர் புலிப்படை! - கருணாஸ்

திமுக கூட்டணியில் உதய சூரியன் சின்னத்தில் முக்குலத்தோர் புலிப்படை போட்டியிடவுள்ளது குறித்து...

The SDPI and Mukulathor Pulipadai, which are part of the DMK alliance, have been allocated 1 seat each.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவர் கருணாஸ் (கோப்புப் படம்) - எக்ஸ்

Published On :

திமுக கூட்டணியில் முக்குலத்தோர் புலிப்படை கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் கருணாஸ் இன்று (மார்ச் 26) தெரிவித்துள்ளார். மேலும், உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், தேமுதிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ம.ம.க. உள்ளிட்ட கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கூட்டணியில் எஞ்சியுள்ள கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

இதனிடையே சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு முக்குலத்தோர் புலிப்படை கட்சிக்கு நேற்று அழைப்பு விடுக்கப்பட்டது. திமுக கூட்டணிப் பங்கீட்டுக் குழுவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அக்கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது.

இதனிடையே இன்று மீண்டும் அண்ணா அறிவாலயத்திற்கு வருகைப்புரிந்த கருணாஸ் கூறியதாவது:

''தேர்தலில் போட்டியிட விருப்பப்பட்டியலில் 5 தொகுதிகளைக் கொடுத்திருந்தோம். இதில் ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. எந்தத் தொகுதி என்பதை முதல்வர் நாளை அறிவிப்பார். உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடவுள்ளோம்.

திமுக தலைமையில் இதற்கு முன்பு இத்தனைக் கட்சிகள் கூட்டணியில் இருந்ததா எனத் தெரியவில்லை. இதுவே முதல்முறை என நினைக்கிறேன்'' எனப் பேசினார்.

Summary

mukkulathor pulipadai contesting in Udaya Suryan - Karunas

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.