போட்டியின்றி எம்.பி.யாகிறார் பிரவீண் சக்ரவர்த்தி!நீட், சிபிஎஸ்இ விவகாரம்: மத்திய அமைச்சர் பதவி விலக வேண்டும் - வைகோஎம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார் திரிணமூல் மூத்த தலைவர்! கட்சியிலிருந்தும் விலகல்!யூடியூபர் மாரிதாஸ் மதுரையில் கைது மானவ் சுதர் அசத்தல்! முதல் இன்னிங்ஸில் 152 ரன்களுக்கு சுருண்டது ஆப்கானிஸ்தான்! மின்வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!
/

கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்

News image

Center-Center-Bangalore

Updated On :19 மே 2026, 4:00 am IST

பெங்களூரு : கர்நாடகத்தில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் புதன்கிழமை ( மே 20) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ள நிலையில், போராட்டத்தில் கலந்துகொண்டால் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என்று கர்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஊதிய உயர்வு உள்ளிட்ட நிலுவையில் உள்ள பல்வேறு கோரிக்கைகளை அரசு சாலை போக்குவரத்துக் கழகங்கள் இழுத்தடித்து வருவதால் வரும் 20}ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக போக்குவரத்துக் கழகங்களின் அதிகாரிகள், ஊழியர்கள் கொண்ட கூட்டு நடவடிக்கைக் குழு அறிவித்துள்ளது. இதனால், அரசுப் பேருந்து சேவைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்துகொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அக்ரம் பாஷா எச்சரித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.