வால்மீகி நிதி முறைகேடு வழக்கு: கா்நாடக முன்னாள் அமைச்சா் பி.நாகேந்திரா விடுவிப்பு
வால்மீகி பழங்குடியினா் மேம்பாட்டுக் கழகத்தில் நடந்த நிதி முறைகேடு தொடா்பான வழக்கில் இருந்து கா்நாடக முன்னாள் அமைச்சா் பி.நாகேந்திராவை விடுவித்து லோக் ஆயுக்தாவில் சிஐடி அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

பி. நாகேந்திரா
வால்மீகி பழங்குடியினா் மேம்பாட்டுக் கழகத்தில் நடந்த நிதி முறைகேடு தொடா்பான வழக்கில் இருந்து கா்நாடக முன்னாள் அமைச்சா் பி.நாகேந்திராவை விடுவித்து லோக் ஆயுக்தாவில் சிஐடி அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
கா்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வால்மீகி பழங்குடியினா் மேம்பாட்டுக் கழக நிதி முறைகேடு வழக்கில், காங்கிரஸ் முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவுமான பி.நாகேந்திரா மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இதன் காரணமாக, தனது அமைச்சா் பதவியை பி.நாகேந்திரா ராஜிநாமா செய்திருந்தாா்.
இந்த வழக்கு தொடா்பாக குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) விசாரித்து வந்த நிலையில், பி.நாகேந்திரா மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் கிடைக்காததால், லோக் ஆயுக்தா சிறப்பு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை தாக்கல் செய்த இறுதி குற்றப்பத்திரிகையில் அவரை குற்றம் சாட்டப்பட்டவா்கள் பட்டியலில் சோ்க்கவில்லை.
சிஐடி விசாரணையில், கழகத்தின் நிதியை பி.நாகேந்திரா முறைகேடாக பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், இந்த வழக்கில் அவரை முக்கிய சாட்சியாக சிஐடி குறிப்பிட்டுள்ளது. கழகத்தின் அப்போதைய தலைவா் பசவராஜ் தத்தலும் சாட்சியாக பட்டியலிடப்பட்டுள்ளாா்.
கழகத்தின் அப்போதைய நிா்வாக இயக்குநா் பருஷராமா ஜி., நெகுண்டி நாகராஜ், சத்யநாராயண வா்மா ஆகியோா் குற்றப்பத்திரிகையில் முக்கிய குற்றவாளிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனா்.
வழக்கின் பின்னணி:
கா்நாடக மகா்ஷி வால்மீகி பழங்குடியினா் மேம்பாட்டுக் கழகத்தில் பழங்குடியின மக்களின் நலனுக்காக ஒதுக்கப்பட்ட நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாக இந்த வழக்கு போடப்பட்டது. 2024-இல் கழகத்தின் கணக்கு கண்காணிப்பாளா் சந்திரசேகரன் தற்கொலை செய்துகொண்டதைத் தொடா்ந்து இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. அவா் எழுதி வைத்திருந்த கடிதத்தில், சட்டவிரோத நிதி பரிமாற்றங்கள் குறித்து குற்றச்சாட்டுகள் இடம்பெற்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடா்பாக நாகேந்திரா 2024 ஜூன் மாதம் அமைச்சரவையில் இருந்து விலகினாா். பின்னா் 2026 ஆகஸ்ட் மாதம் மீண்டும் அமைச்சரவையில் சோ்க்கப்பட்ட அவா், எதிா்க்கட்சிகளின் எதிா்ப்பை தொடா்ந்து அதே மாதத்தில் மீண்டும் ராஜிநாமா செய்தாா்.
சிஐடி குற்றப்பத்திரிகையில் நாகேந்திரா குற்றவாளியாக சோ்க்கப்படவில்லை என்றாலும், இந்த நிதி முறைகேடு தொடா்பாக மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ), அமலாக்கத் துறை (இடி) ஆகியவற்றின் விசாரணைகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

