சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் சித்தராமையா, அவரது மகன் யதீந்திரா தோல்வி உறுதி என மஜத மாநிலத் தலைவர் எச்.டி.குமாரசாமி தெரிவித்தார்.
மைசூரில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் சாமுண்டீஸ்வரி தொகுதியில் முதல்வர் சித்தராமையாவும், வருணா தொகுதியில் அவரது மகன் யதீந்திராவும் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட முடிவு செய்துள்ளனர்.
தொடக்கத்தில் சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிட்ட சித்தராமையா, பல்வேறு காரணங்களால், வருணா தொகுதிக்கு மாறினார். தற்போது அவரது மகன் யதீந்திராவை அரசியலுக்கு கொண்டு வருவதற்காக மீண்டும் சாமுண்டீஸ்வரி தொகுதிக்கு மாறியுள்ளார். அவரை இரு தொகுதி மக்களும் நன்கு புரிந்து வைத்துள்ளனர்.
எனவே, வரும் தேர்தலில் சாமுண்டீஸ்வரி தொகுதியில் முதல்வர் சித்தராமையாவையும், வருணா தொகுதியில் அவரது மகன் யதீந்திராவையும் தோற்கடிக்க மக்கள் முடிவு செய்துள்ளனர். நஞ்சன்கூடு, குண்டல்பேட்டை இடைத் தேர்தலில் பல்வேறு காரணங்களால் மஜத வேட்பாளர்கள் நிறுத்தப்படவில்லை.
இதனால் காங்கிரஸ் அத்தொகுதிகள் வெற்றி பெற்றது. இடைத்தேர்தல் வெற்றியை தனது ஆட்சிக்கு கிடைத்த வெற்றியாக சித்தராமையா புரிந்து கொண்டுள்ளார்.
இதனால், சட்டப்பேரவைத் தேர்தலை அவர் எளிதாக எடுத்து கொண்டுள்ளார். தேர்தல் முடிவுகள் அவருக்கு உண்மையை புரியவைக்கும் என்றார்.
பேட்டியின் போது, எம்எல்ஏ ஜி.டி.தேவெ கெளடா, எம்.எல்.சி சரவணா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.






