விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

சித்தராமையா, யதீந்திரா தோல்வி உறுதி

சட்டப்பேரவைத் தேர்தலில்  முதல்வர் சித்தராமையா, அவரது மகன் யதீந்திரா தோல்வி உறுதி என மஜத மாநிலத் தலைவர் எச்.டி.குமாரசாமி தெரிவித்தார்.

Updated On :5 ஏப்ரல் 2018, 7:04 am IST

சட்டப்பேரவைத் தேர்தலில்  முதல்வர் சித்தராமையா, அவரது மகன் யதீந்திரா தோல்வி உறுதி என மஜத மாநிலத் தலைவர் எச்.டி.குமாரசாமி தெரிவித்தார்.
மைசூரில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் சாமுண்டீஸ்வரி தொகுதியில் முதல்வர் சித்தராமையாவும், வருணா தொகுதியில் அவரது மகன் யதீந்திராவும் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட முடிவு செய்துள்ளனர். 
தொடக்கத்தில் சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிட்ட சித்தராமையா,  பல்வேறு காரணங்களால், வருணா தொகுதிக்கு மாறினார். தற்போது அவரது மகன் யதீந்திராவை அரசியலுக்கு கொண்டு வருவதற்காக மீண்டும் சாமுண்டீஸ்வரி தொகுதிக்கு மாறியுள்ளார். அவரை இரு தொகுதி மக்களும் நன்கு புரிந்து வைத்துள்ளனர். 
எனவே, வரும் தேர்தலில் சாமுண்டீஸ்வரி தொகுதியில் முதல்வர் சித்தராமையாவையும், வருணா தொகுதியில் அவரது மகன் யதீந்திராவையும் தோற்கடிக்க மக்கள் முடிவு செய்துள்ளனர். நஞ்சன்கூடு, குண்டல்பேட்டை இடைத் தேர்தலில் பல்வேறு காரணங்களால் மஜத வேட்பாளர்கள் நிறுத்தப்படவில்லை. 
இதனால் காங்கிரஸ் அத்தொகுதிகள் வெற்றி பெற்றது. இடைத்தேர்தல் வெற்றியை தனது ஆட்சிக்கு கிடைத்த வெற்றியாக சித்தராமையா புரிந்து கொண்டுள்ளார். 
இதனால், சட்டப்பேரவைத் தேர்தலை அவர் எளிதாக எடுத்து கொண்டுள்ளார். தேர்தல் முடிவுகள் அவருக்கு உண்மையை புரியவைக்கும் என்றார்.
பேட்டியின் போது, எம்எல்ஏ ஜி.டி.தேவெ கெளடா, எம்.எல்.சி சரவணா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.