பெங்களூரில் மக்களுடன் மக்களாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார்.
பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை காலை பத்திரிகையாளர்களுடனான சந்திப்பில் ராகுல் கலந்துகொண்டார். இதைத் தொடர்ந்து, முன்னாள் மத்திய அமைச்சர் மார்கரேட் ஆல்வாவின் இல்லத்துக்குச் சென்று அவரது கணவர் நிரஞ்சன் தாமஸ் ஆல்வாவின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார்.
பின்னர், அங்கிருந்து காந்தி நகர் தொகுதியில் உள்ள நேரு சதுக்கத்துக்குச் சென்று அங்குள்ள மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதையடுத்து, அருகில் இருந்த வீட்டிற்கு சென்று சிற்றுண்டி உண்ட பின்னர், ஜக்கராயனகெரே பகுதியில் துப்புரவுத் தொழிலாளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ராகுல் கலந்து கொண்டார்.
பின்னர், சென்ட்ரல் கல்லூரி ஞானஜோதி அரங்கில் நடைபெற்ற தொழிலதிபர்களுடனான நிகழ்ச்சியில் ராகுல் கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து, விதானசெளதாவிலிருந்து மெட்ரோ ரயிலில் மக்களுடன் மக்களாக பயணம் செய்த அவர், எம்.ஜி.சாலையில் இறங்கி, சர்ச் சாலையில் உள்ள புத்தக விற்பனை நிலையத்துக்குச் சென்று புத்தகங்களை வாங்கினார். பின்னர், மாலை அரண்மனை திடலில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற மக்கள் ஆசீர்வாதக்கூட்டத்திலும் ராகுல் கலந்துகொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிய... புதிய இணையதள முகவரி!

சிறுத்தை தாக்கி 3 ஆடுகள் பலி

மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு தொடங்கியது!

கொக்கராயன்பேட்டையில் தறித் தொழிலாளி தற்கொலை
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

