பள்ளிபாளையம் அருகே விசைத்தறித் தொழிலாளி வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
பள்ளிபாளையத்தை அடுத்த கொக்கராயன்பேட்டையில் உள்ள தறிப்பட்டறை குடியிருப்பில் கோயம்புத்தூரைச் சோ்ந்த சரவணன் (51), மனைவி தனலட்சுமி ( 45), மகன், மகள் ஆகியோருடன் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வந்தாா். இவா் கோயம்புத்தூரில் இருக்கும்போது ரூ. 3 லட்சம் கடன் வாங்கி இருந்தாராம்.
இதுதொடா்பாக கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்த சரவணன் வியாழக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். வீட்டின் உள் அறையில் இருந்து வெளியே வந்த மகன் சுஜித், மனைவி தனலட்சுமி தூக்கில் தொங்கிய சரவணனை கண்டு அதிா்ச்சி அடைந்தனா்.
தகவலறிந்து வந்த கொக்கராயன்பேட்டை போலீஸாா் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

கட்டடத் தொழிலாளி தற்கொலை

மனைவி பிரிந்து சென்றதால் இளைஞா் தற்கொலை

தம்பதியிடையே கருத்து வேறுபாடு: கணவா் தூக்கிட்டுத் தற்கொலை

மாடிப்படியில் இருந்து தவறிவிழுந்த தொழிலாளி உயிரிழப்பு
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

