வளர்ச்சியை பற்றி பேசாமல் பிரதமர் நரேந்திர மோடி, எடியூரப்பா போன்றவர்களை காங்கிரஸ் தலைவர் ராகுல் குறைகளை கூறிவருகிறார் என்று பாஜக மாநிலப் பொதுச் செயலரும், மக்களவை உறுப்பினருமான ஷோபா கரந்தலஜே தெரிவித்தார்.
பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள பாஜக அலுவலகத்தில் அவர் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:-
கர்நாடகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் அரசு மக்களுக்கு வழங்கிய வளர்ச்சிப் பணிகள் குறித்து எதையும் பேசமுடியாமல் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி திணறி வருகிறார்.
சித்தராமையா தலைமையிலான ஆட்சியானது அனைத்து துறைகளிலும் தோல்வியைத் தழுவியுள்ளது. இதனால் கர்நாடகம் வளர்ச்சி அடையாமல் முடங்கிப்போய் உள்ளது. இதனால் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள ராகுல் காந்தி, மாநில அரசின் வளர்ச்சிப் பணிகளைப் பற்றி பேசாமல், பிரதமர் நரேந்திர மோடியையும், மாநில பாஜக தலைவர் எடியூரப்பாவை குறை கூறுவதிலேயே காலம் கழித்து வருகிறார்.
காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகளை ராகுல் காந்தி பேச வேண்டும். அதனை பேசாமல் அவர் மெளனம் காத்து வருகிறார்.
கோலார், சிக்பள்ளாபூர் மாவட்டங்களில் நிரந்தமாக குடிநீர் வழங்க, எத்திஹொளே திட்டத்தை காங்கிரஸ் அரசு அறிவித்தது. அதனை அமல்படுத்துவதற்கு ரூ. 12 ஆயிரம் கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக அதிக அளவிலான குழாய்கள் வாங்கப்பட்டன. ஆனால் அதனை பதிக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதிலும் பல கோடி ரூபாய் மதிப்பிலான முறைகேடு நடைபெற்றுள்ளது. இதற்கு முதல்வர் சித்தராமையாவே பொறுப்பு ஏற்க வேண்டும். திட்டம் தோல்வி அடைந்ததற்கு கோலார், சிக்பள்ளாபூர் மக்களிடம் சித்தராமையா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார் ஷோபா
கரந்தலஜே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
நூறு கோடி பேர் பார்த்த காணொலி

எல்.இ.டி. வரலாற்றில் மறக்கக் கூடாத லோசெவ்

பசுமை மனிதர்...
சிரி... சிரி...
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

