8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு
எத்தனை தோல்வி ஏற்பட்டாலும் வெற்றி என்ற இலக்கை நோக்கி முன்னேறும் எட்டாம் எண் அன்பர்களே இந்த காலகட்டத்தில் மனக்கவலை நீங்கி எதிலும் தெளிவான முடிவு எடுப்பீர்கள். பணவரத்து கூடும். காரிய தடைகள் அகன்று எதிலும் திருப்தியான போக்கு காணப்படும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் சாதூரியமான பேச்சின் மூலம் முன்னேற்றம் காண்பார்கள். எதிர்பார்த்தபடி நிதிநிலை உயரும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலான பணிகளை கவனிக்க வேண்டி இருக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் டென்ஷன் உண்டாகலாம். பெண்களுக்கு எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் காரிய தாமதம் உண்டாகும்.
கலைத்துறையினர் சீரான நிலையில் இருக்கும். அரசியல்வாதிகளுக்கு பாடுபட வேண்டியிருந்தாலும் மிகவும் நன்றாக இருக்கும். மாணவர்களுக்கு உயர்கல்வி கற்க தேவையான பணவசதி கிடைக்கும்.
பரிகாரம்: ராஜராஜேஸ்வரியை தீபம் ஏற்றி வணங்க செல்வம் சேரும். செல்வாக்கு உயரும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









