தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

மே மாத எண்கணித பலன்கள் – 4

எண்கணிதப்படி இந்த மாதம் உங்களுக்கு எப்படி?

News image
Updated On :2 மே 2026, 3:05 pm IST

4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

அடுத்தவர்களை அனுசரித்து காரியங்களில் வெற்றி பெறும் நான்காம் எண் அன்பர்களே இந்த மாதம் சுபச்செலவு ஏற்படும். சிந்தித்து செயல்படுவது நன்மை தரும். பணவரவு நன்றாக இருக்கும். அடுத்தவர் நலனுக்காக பாடுபட வேண்டி இருக்கும்.

தொழில் வியாபாரம் தொடர்பாக பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் அவ்வப்போது வாக்குவாதங்கள் உண்டாகலாம்.

உறவினர்களுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. பெண்களுக்கு வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். மற்றவர்கள் பிரச்சனை தீர பாடுபடுவீர்கள். கலைத்துறையினருக்கு சிறப்பான காலகட்டமாக இருக்கும். தாமதமாகி வந்த வாய்ப்புகள் திரும்ப கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு மந்தமாக காணப்படும். மேலிடத்தை அனுசரித்து செல்வது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும்.

பரிகாரம்:  குலதெய்வத்தை வணங்கிவர பணவரத்தில் இருந்த தடை நீங்கும். காரிய வெற்றி உண்டாகும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.