காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்துவதைக் கண்டித்து, ஏப்ரல் 12-ஆம் தேதி கர்நாடகத்தில் நடைபெற உள்ள முழு அடைப்பு போராட்டத்துக்கு கர்நாடக திரைப்பட வர்த்தக சபை ஆதரவு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தலைவர் சா.ரா.கோவிந்து வெளியிட்டுள்ள அறிக்கை:-
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள், திரைப்படத்துறையினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் போராட்டங்களைக் கண்டித்து ஏப்ரல் 12-ஆம் தேதி கர்நாடகத்தில் முழு அடைப்புக்கு கன்னட சலுவளி கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.
அன்றைய தினம் நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்துக்கு கர்நாடக திரைப்பட வர்த்தக சபை முழு ஆதரவு அளிக்கும். கர்நாடகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தங்களின் தேர்தல் அறிக்கையில் மேக்கேதாட்டு, மகதாயி திட்டங்கள் அமல்படுத்துவது குறித்து குறிப்பிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே மாத எண்கணித பலன்கள் – 2
தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்

மே மாத எண்கணித பலன்கள் – 1

வணிக சிலிண்டர் விலை உயர்வு: வைகோ கண்டனம்
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

