காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகும் எண்ணமில்லை என்று முன்னாள் அமைச்சர் அம்பரீஷ் தெரிவித்தார்.
பெங்களூரில் அவர் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: -
அண்மைக்காலமாக காங்கிரஸ் கட்சியிலிருந்து நான் (அம்பரிஷ்) விலக உள்ளதாக வதந்திகள் பரவி வருவதில், உண்மையில்லை. பதவி, கெளரவம் உள்ளிட்ட எல்லாவற்றையும் அளித்த காங்கிரஸில் இருந்து விலகும் எண்ணமில்லை.
அரசியல் வாழ்க்கையில் பல்வேறு ஏற்றத் தாழ்வுகளைச் சந்தித்துள்ளேன். எதைப் பற்றியும் அதிகம் கவலை கொள்ள மாட்டேன்.
மண்டியா தொகுதியிலிருந்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடுவதா? அல்லது அரசியலிருந்து விலகி இருப்பதா என்பது குறித்து விரைவில் முடிவு எடுப்பேன் என்றார் அவர்.
பாஜக பிரமுகரும், நடிகருமான கிருஷ்ணம் ராஜுவை ஹைதராபாத்தில் அம்ரீஷ் அண்மையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதனைத் தொடர்ந்து, அம்பரீஷ் பாஜகவில் இணைய உள்ளதாக வதந்தி பரவியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்குக் கணிப்பு: உண்மையும் அல்ல; பொய்யும் அல்ல!

உழைப்புக்கான பலன் மே 4-ல் கிடைக்கும்: முதல்வர் ஸ்டாலின்

பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்!

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

