சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்சென்னையில் பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!புனேவில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பேசுபொருளாகும் ஜோதிமணி ட்வீட்!கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புமேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

வளர்ச்சியை பேசாமல் மோடியை மட்டுமே குறை சொல்வதா? ராகுலுக்கு ஷோபா கரந்தலஜே கேள்வி

வளர்ச்சியை பற்றி பேசாமல்  பிரதமர் நரேந்திர மோடி,  எடியூரப்பா போன்றவர்களை  காங்கிரஸ் தலைவர் ராகுல் குறைகளை கூறிவருகிறார்  

Updated On :9 ஏப்ரல் 2018, 2:25 am

வளர்ச்சியை பற்றி பேசாமல்  பிரதமர் நரேந்திர மோடி,  எடியூரப்பா போன்றவர்களை  காங்கிரஸ் தலைவர் ராகுல் குறைகளை கூறிவருகிறார்  என்று பாஜக மாநிலப் பொதுச் செயலரும், மக்களவை உறுப்பினருமான ஷோபா கரந்தலஜே தெரிவித்தார்.
பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள பாஜக அலுவலகத்தில் அவர் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:-
கர்நாடகத்தில் கடந்த 5 ஆண்டுகளில்  ஆட்சியில் உள்ள காங்கிரஸ் அரசு மக்களுக்கு வழங்கிய வளர்ச்சிப் பணிகள் குறித்து எதையும் பேசமுடியாமல் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி திணறி வருகிறார். 
சித்தராமையா தலைமையிலான ஆட்சியானது அனைத்து துறைகளிலும் தோல்வியைத் தழுவியுள்ளது. இதனால் கர்நாடகம் வளர்ச்சி அடையாமல் முடங்கிப்போய் உள்ளது. இதனால் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள ராகுல் காந்தி, மாநில அரசின் வளர்ச்சிப் பணிகளைப் பற்றி பேசாமல், பிரதமர் நரேந்திர மோடியையும், மாநில பாஜக தலைவர் எடியூரப்பாவை குறை கூறுவதிலேயே காலம் கழித்து வருகிறார். 
காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகளை ராகுல் காந்தி பேச வேண்டும். அதனை பேசாமல் அவர் மெளனம் காத்து வருகிறார். 
கோலார், சிக்பள்ளாபூர் மாவட்டங்களில் நிரந்தமாக குடிநீர் வழங்க, எத்திஹொளே திட்டத்தை காங்கிரஸ் அரசு அறிவித்தது. அதனை அமல்படுத்துவதற்கு ரூ. 12 ஆயிரம் கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக அதிக அளவிலான குழாய்கள் வாங்கப்பட்டன.  ஆனால் அதனை பதிக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதிலும் பல கோடி ரூபாய் மதிப்பிலான முறைகேடு நடைபெற்றுள்ளது. இதற்கு முதல்வர் சித்தராமையாவே பொறுப்பு ஏற்க வேண்டும். திட்டம் தோல்வி அடைந்ததற்கு கோலார், சிக்பள்ளாபூர் மக்களிடம் சித்தராமையா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார் ஷோபா
கரந்தலஜே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.