பிரபல இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கிவரும் படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழில் ராஜ பார்வை, அபூர்வ சகோதரர்கள், மைக்கல் மதன காமராஜன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ். தமிழ், தெலுங்கில் முன்னணி இயக்குநராக வலம்வந்தவர், தொழில்நுட்ப ரீதியாகவும் சினிமாவில் பல நல்ல முயற்சிகளை மேற்கொண்டவர்.
தனித்திறன் கொண்ட படைப்பாளியாக கருதப்படும் இவருக்கு நடிகர் கமல் ஹாசன், ‘அபூர்வ சிங்கீதம்’ என்கிற பெயரில் கொண்டாட்ட நிகழ்வை நடத்தினார்.
அண்மையில், சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கும் அவரது 61-வது திரைப்படத்தைத் தயாரிக்கவுள்ளதாக வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், இயக்குநர் நாக் அஸ்வின் தயாரிக்கும் இப்படத்திற்கு ’சிங் கீதம்’ எனப் பெயரிட்டுள்ளதாக டீசர் வெளியிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், முன்னணி நடிகர்களாக அயான், அஹில்யா, ஷாலினி ஆகியோர் நடிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது.
மேலும், டீசரில் இப்படத்தை வருகிற ஜூன் 11 ஆம் தேதி வெளியிடவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர். தன் 94-வது வயதில் சிங்கீதம் சீனிவாச ராவ் தன் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பை 3 மாதங்களில் முடித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
An update has been released for the film directed by famous director Singeetham Srinivasa Rao.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கலகக்காரி சான்யா மல்ஹோத்ரா..! அற்புதமான நடிகர் ராஜ்குமார் ராவ்!

அல்லு அர்ஜுன் - அட்லி படத்தின் பெயர் அப்டேட்!
29 புதிய அப்டேட்!
தனுஷ் படத்தின் புதிய அப்டேட் வெளியானது!
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

