நடிகை சான்யா மல்ஹோத்ரா தனது நேர்காணலில், “நடிகர் ராஜ்குமார் ராவ் உடன் நடிப்பதற்காக மிகவும் எதிர்பார்த்து காத்திருந்தேன்” எனக் கூறியுள்ளார்.
தில்லியைச் சேர்ந்த நடிகை சான்யா மல்ஹோத்ரா ’டேன்ஸ் இந்தியா டேன்ஸ்’ என்ற தொலைக்காட்சியில் நடனத்தின் மூலம் பிரபலமாகி பின்னர் நடிகையாக 2016ல் ஆமிர் கானின் தங்கல் படத்தில் அறிமுகமானார்.
ராஜ்குமார் ராவ் உடன் முதன்முதலாக 2020ல் லூடோ எனும் படத்தில் நடித்திருந்தார். பின்னர், 2022ல் ஹிட்: பர்ட்ஸ்ட் கேஸ் எனும் ரீமேக் படத்தில் நடித்திருந்தார். தற்போது, விவேக் தாஸ்சௌத்ரி இயக்கத்தில் டோஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்தை நடிகர் ராஜ்குமார் ராவ், அவரது மனைவி இணைந்து தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் நேற்று நெட்பிளிக்ஸில் வெளியான நிலையில் இது குறித்து சான்யா மல்ஹோத்ரா பிடிஐக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:
ராஜ்குமார் ராவ் உடன் நடிக்க நான் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்தேன். ஏனெனில், அவர் எவ்வளவு சிறப்பான நடிகர் என்று தெரியும். இது மிகவும் அருமையான வாய்ப்பு என்றார்.
சான்யா குறித்து ராஜ்குமார் ராவ், “இந்தப் படத்தில் சான்யா மிகவும் நகைச்சுவையாக நடித்துள்ளார். அவரது நடிப்பைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறோம். சான்யாவை நமக்குத் தெரியும். அவர் படப்பிடிப்புத் தளத்தில் ஜாலியாக இருப்பவர். இருந்தும் தனது பணிகளை அமைதியாக உட்கார்ந்து செய்யக்கூடியவர். திரையில் சான்யாவைப் பார்க்கும்போது வியக்கத்தக்கதாக இருந்தது என்றார்.
ராஜ்குமார் ராவ் மனைவி பத்ரலேகா, “சான்யா படப்பிடிப்பு தளத்தில் ஒரு கலகக்காரி போல இருப்பார். மிசஸ் படத்தில் சிறப்பாக நடித்திருப்பார்” என்றார்.
மலையாளத்தில் வெளியான தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தினை ஹிந்தியில் ’மிசஸ்’ என்ற பெயரில் சான்யா மல்ஹோத்ரா நடிப்பில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
Summary
I was dying to work with Rajkumar rao says Sanya Malhotra
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சைகலாஜிக்கல் த்ரில்லரான ராவ் பகதூர் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி!

ஜெயிலர் 2 படக்குழு வெளியிட்ட ஷிவ ராஜ்குமார் பிறந்த நாள் விடியோ!

தனுஷின் ஓம் திரைப்படத்தில் இணைந்த நஸ்ருதின் ஷா!

ஓடிடியில் வெளியானது சிங்கீதம்!
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



