நடிகர் ஹிருத்திக் ரோஷனை ஜெயிலர் - 2 படத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.
ஜெயிலர் - 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தாக கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காட்சிகளில் திருப்தி இல்லாததால் இயக்குநர் நெல்சன் மேலும் 15 நாள்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு சென்னை பனையூரிலுள்ள ஆதித்யராம் ஸ்டூடியோவில் செட் அமைத்து படப்பிடிப்பை நடத்தி வருகிறார்.
படப்பிடிப்பின் போது சில நாள்களுக்கு முன் வீடு போன்ற செட் அமைப்பில் மின்விசிறியை மாட்டும்போது, சேலத்தைச் சேர்ந்த 28 வயதான கார்த்திகேயன் என்கிற இளைஞர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால், ஓரிரு நாள்கள் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு மீண்டும் துவங்கியது.
இந்த நிலையில், இப்படத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்குப் பதிலாக நடிகர் ஹிருத்திக் ரோஷனை அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கத் தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறதாம். பல ஆண்டுகளுக்கு முன் நடிகர் ரஜினியுடன் குழந்தை நட்சத்திரமாக ஹிருத்திக் ரோஷன் நடித்துள்ளார்.
மேலும், நடிகரும் ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் ஜெயிலர் - 2 படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க மறுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
Talks are reportedly underway to cast actor Hrithik Roshan in the film Jailer 2
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








