நடிகர் யோகி பாபு ஜெயிலர் - 2 திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.
ஜெயிலர் - 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 150 நாள்களுக்கும் மேல் கேரளம், சென்னை, ஹைதராபாத் உள்பட பல இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.
ரஜினியுடன் பல நட்சத்திர நடிகர்களும் இணைந்துள்ளதால் வணிக ரீதியாகவும் இப்படம் இந்தியளவில் கவனிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இப்படம் குறித்து பேசிய நடிகர் யோகி பாபு, “ஜெயிலர் - 1 ஹிட் அடித்தது. ஜெயிலர் - 2 மெகா ஹிட் அடிக்கப்போகிறது. நெல்சன் மிகப்பிரமாதமாக உருவாக்கி வருகிறார்” எனக் கூறியுள்ளார்.
ஜெயிலர் முதல் பாகத்தில் கார் ஓட்டுநராக நடித்த யோகி பாபுவின் நகைச்சுவைகள் ரசிகர்களைச் சிரிக்க வைத்தது. இரண்டாம் பாகத்திலும் இருவருக்குமான காட்சிகள் இருக்கும் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Actor Yogi Babu has spoken about the movie Jailer 2
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

யோகி பாபு பிறந்த நாள்... ஆர்டினரி மேன் சிறப்பு போஸ்டர்!

ஜெயிலர் - 2 திரைப்படத்தின் தெலுங்கு வெளியீட்டு உரிமம் இத்தனை கோடிகளா?

அர்ஜுனன் பேர் பத்து படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது?

யோகி பாபு 11 வேடங்களில் நடிக்கும் புதிய படம்!
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



