எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார் திரிணமூல் மூத்த தலைவர்! கட்சியிலிருந்தும் விலகல்!தில்லியில் இந்தியா கூட்டணி கூட்டம் தொடங்கியது! விசிக, மதிமுக பங்கேற்பு! யூடியூபர் மாரிதாஸ் மதுரையில் கைது மானவ் சுதர் அசத்தல்! முதல் இன்னிங்ஸில் 152 ரன்களுக்கு சுருண்டது ஆப்கானிஸ்தான்! மின்வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!முதல்வர் விஜய்யுடன் செஸ் வீரர் பிரக்ஞானந்தா சந்திப்பு
/

3 மாதங்களுக்குப் பிறகு ஓடிடிக்கு வரும் யோகி பாபுவின் கெணத்த காணோம்!

யோகி பாபுவின் கெணத்த காணோம் படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக...

News image

கெணத்த காணோம் படத்தின் காட்சி - படம்: சினிமா எக்ஸ்பிரஸ்

Updated On :8 ஜூன் 2026, 11:56 am IST

யோகி பாபுவின் கெணத்த காணோம் திரைப்படம், திரைக்கு வந்து 3 மாதங்களுக்குப் பிறகு ஓடிடிக்கு வருகிறது.

ஒரு கிடாயின் கருணை மனு, சத்திய சோதனை ஆகிய திரைப்படங்களை இயக்கி கவனம் பெற்றவர் இயக்குநர் சுரேஷ் சங்கையா. இதில், ஒரு கிடாயின் கருணை மனு திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுகளைப் பெற்றது.

கதையம்சமுள்ள இயக்குநர் எனப் பெயரெடுத்த சுரேஷ் சங்கையா, கல்லீரல் செயலிழப்பால் உடல்நலம் பாதிக்கப்பட்டு 2024-ல் உயிரிழந்தார்.

இறப்புக்கு முன், நடிகர் யோகி பாபுவை வைத்து ‘கெணத்த காணோம்’ என்கிற திரைப்படத்தையும் இயக்கி வந்தார்.

இந்தப் படத்தில் யோகி பாபு, கோயில் பூசாரியாக நடித்துள்ளார். மேலும் லவ்லின் சந்திரசேகர், ரைச்சல் ரபேக்கா, ஜார்ஜ் மரியம், கவிதா பாரதி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நிவாஸ் கே பிரசன்னா இசையமைப்பில் உருவான இந்தப் படம் கடந்த மார்ச் 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்த நிலையில், கெணத்த காணோம் திரைப்படம் வரும் ஜூன் 15 ஆம் தேதி ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.

Summary

Yogi Babu's film Kenatha Kaanom is coming to OTT three months after its theatrical release.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.