பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

ஓடிடியில் வெளியான யோகி பாபுவின் கெணத்த காணோம்!

யோகி பாபுவின் கெணத்த காணோம் திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக...

Published On :

நடிகர் யோகி பாபுவின் கெணத்த காணோம் திரைப்படம் ஓடிடி தளத்தில் இன்று(ஜூன் 16) வெளியாகியுள்ளது.

ஒரு கிடாயின் கருணை மனு, சத்திய சோதனை ஆகிய திரைப்படங்களை இயக்கி கவனம் பெற்றவர் இயக்குநர் சுரேஷ் சங்கையா. இவர், கல்லீரல் செயலிழப்பால் உடல்நலம் பாதிக்கப்பட்டு 2024-ல் உயிரிழந்தார்.

இறப்புக்கு முன், நடிகர் யோகி பாபுவை வைத்து ‘கெணத்த காணோம்’ என்கிற திரைப்படத்தை இயக்கி வந்தார்.

இந்தப் படத்தில் யோகி பாபு, கோயில் பூசாரியாக நடித்துள்ளார். மேலும் லவ்லின் சந்திரசேகர், ரைச்சல் ரபேக்கா, ஜார்ஜ் மரியம், கவிதா பாரதி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Story image

நிவாஸ் கே பிரசன்னா இசையமைப்பில் உருவான இந்தப் படம், கடந்த மார்ச் 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்த நிலையில், 3 மாதங்களுக்குப் பிறகு கெணத்த காணோம் திரைப்படம், இன்று ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Summary

Actor Yogi Babu's film Kenathai Kaanom has been released on an OTT platform today (June 16).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.