கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம் தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிப்பு! பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி
/

இன்றும், நாளையும் கர்நாடக பொதுநுழைவுத் தேர்வு

தொழில் கல்விக்கான பொதுநுழைவுத் தேர்வை ஏப்.18,19 ஆகிய தேதிகளில் நடத்த கர்நாடக தேர்வு ஆணையம் திட்டமிட்டுள்ளது.

Updated On :18 ஏப்ரல் 2018, 7:46 am IST

தொழில் கல்விக்கான பொதுநுழைவுத் தேர்வை ஏப்.18,19 ஆகிய தேதிகளில் நடத்த கர்நாடக தேர்வு ஆணையம் திட்டமிட்டுள்ளது.
2018-19-ஆம் கல்வியாண்டில் பொறியியல், பிஎஸ்சி (விவசாயம், கால்நடை, பட்டுவளர்ப்பு, காடுவளர்ப்பு, தோட்டக்கலை), பி.ஃபார்ம், டி.ஃபார்ம் ஆகிய படிப்புகளை வழங்கும் கல்லூரிகளில் சேருவதற்காக மாணவர்களை தெரிவு செய்வதற்கு கர்நாடக தேர்வு ஆணையம் கர்நாடக பொதுநுழைவுத் தேர்வுகளை ஏப்.18,19 ஆகிய தேதிகளில் நடத்தத் திட்டமிட்டுள்ளது. 
இதற்காக மாநிலம் முழுவதும் 430 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பெங்களூரில் மட்டும் 86 மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்தத் தேர்வை மாநிலம் முழுவதும் 1,00,071 மாணவர்கள், 98,568 மாணவிகள் எழுதுகின்றனர். தேர்வை நடத்துவதற்கு 430 பார்வையாளர்கள், 860 சிறப்பு பறக்கும் படை உறுப்பினர்கள், 430 பாதுகாவலர்கள், 12,440 கண்காணிப்பாளர்கள் உள்பட 31,360 அதிகாரிகள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். ஏப்.18-இல் காலை 10.30 மணி முதல் காலை 11.50 மணி வரை உயிரியல், அன்று பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 3.50 மணிவரை கணிதம், ஏப்.19-இல் காலை 10.30 மணி முதல் காலை 11.50 மணிவரை இயற்பியல், அன்று பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 3.50 மணிவரை வேதியியல் பாடங்களுக்கான தேர்வு நடக்கிறது. வெளிமாநில மற்றும் எல்லைப்பகுதி கன்னடர்களுக்காக ஏப்.20-ஆம் தேதி காலை 11.30 முதல் நண்பகல் 12.30 மணிவரை கன்னடமொழி பாடங்களுக்கான தேர்வு நடக்கிறது. இத்தேர்வை 2,240 மாணவர்கள் எழுதுகிறார்கள். 
உயிரியல், கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களுக்கு தலா 60 மதிப்பெண்களும், கன்னடமொழிக்கு 50 மதிப்பெண்களும் வழங்கப்படுகிறது. வினாத்தாள்கள் ஆங்கிலம் மற்றும் கன்னடத்தில் வழங்கப்படவிருக்கின்றன.
மாணவர்களின் கவனத்துக்கு...
மாணவர்கள் தேர்வுமையத்துக்கு நுழைவுச்சீட்டு தவிர, கல்லூரி அடையாள அட்டை, பேருந்து அட்டை, ஓட்டுநர் உரிமம், கடவுச்சீட்டு, ஆதார் அட்டை, பான் அட்டைகளில் ஏதாவது ஒன்றை அடையாள அட்டையாக கொண்டுசெல்ல வேண்டியது அவசியமாகும். தேர்வு அறைகளில் சுவர்கடிகாரம் வைக்கப்பட்டுள்ளதால், தேர்வுமையங்களில் மாணவர்கள் கைக் கடிகாரம் கட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 
மேலும், தேர்வு மையத்தில் செல்லிடப்பேசி, பேஜர், ப்ளூடூத் உள்ளிட்ட எந்தவகையான மின்னணுக் கருவிகளையும் கொண்டுசெல்ல அனுமதி கிடையாது.
இதுதவிர மார்க்கர், ஒயிட் ஃப்ளூயிட், ஒயர்லெஸ் செட்கள், நூல்கள் கொண்டு செல்லவும் அனுமதி இல்லை. கருப்பு அல்லது நீலநிற பால்பாய்ன்ட் பேனாக்களில் மட்டுமே தேர்வு எழுத மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தேர்வு நடைபெறுவதற்கு அரைமணி நேரத்திற்கு முன்னதாக மாணவர்கள் தேர்வு மையத்தில் இருக்குமாறு கர்நாடக தேர்வு ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. நுழைவுச்சீட்டுகளை   ‌h‌t‌t‌p://‌k‌e​a.‌k​a‌r.
‌n‌i​c.‌i‌n என்ற இணையதளத்தில் தரவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.