அதிமுவில் சி.வி. சண்முகம் தரப்பில் இருந்து 3 எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எதிராக சி.வி. சண்முகம் தரப்பு எம்எல்ஏக்கள் பிரிந்து, சட்டப்பேரவையில் 25 அதிமுகவுக்கு எம்எல்ஏக்கள் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இதனால் சி.வி. சண்முகம் தரப்பு எம்எல்ஏக்களை பதவி நீக்கம் செய்து தற்போதைய அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இந்நிலையில் எஸ்.பி. வேலுமணிக்கு ஆதரவாக இருந்த 3 எம்எல்ஏக்கள் இபிஎஸ் தரப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆற்காடு எம்எல்ஏ சுகுமார் இன்று காலை எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
அதேபோல பண்ருட்டி எம்எல்ஏ மோகன், இபிஎஸ் ஆதரவாளரான கே.பி. முனுசாமியுடன் சந்திப்பு மேற்கொண்டுள்ளார்.
இவர்களைத் தொடர்ந்து சங்கரன்கோவில் எம்எல்ஏ திலீபன் ஜெய்சங்கரும் இபிஎஸ்ஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆதரவு 25 ஆக உயர்ந்துள்ளது. இது சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தரப்புக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
கொறடா, சட்டப்பேரவைக் கட்சித் தலைவரை நியமிப்பது தொடர்பாக சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகரை சி.வி.சண்முகம் தரப்பு எம்எல்ஏக்கள் இன்று சந்தித்துப் பேசியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Summary
3 AIADMK MLAs Switching from sp velumani team to eps team
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கொறடா விவகாரம்: பேரவைத் தலைவருடன் சி.வி. சண்முகம் தரப்பு எம்எல்ஏக்கள் மீண்டும் சந்திப்பு!
எடப்பாடி பழனிசாமி தரப்பு எம்எல்ஏக்கள் 22 பேரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: பேரவைத் தலைவரிடம் எஸ்.பி.வேலுமணி தரப்பு வலியுறுத்தல்

அதிமுகவில் பிளவு! பேரவைத் தலைவரிடம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் சி. வி. சண்முகம் கடிதம்!

எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக 17 எம்எல்ஏக்கள் மட்டுமே! பேரவைச் செயலரிடம் கடிதம்
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



