தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் உச்சகட்ட பரபரப்பு! எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அதிமுக நிர்வாகிகள் அவசர கூட்டம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்திமுக தலைவர் மு. க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் சி. ஜோசப் விஜய்எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேரவைச் செயலரிடம் 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு கடிதம் அளித்திருப்பதாக தகவல்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!
/

அதிமுகவில் பிளவு! பேரவைத் தலைவரிடம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் சி. வி. சண்முகம் கடிதம்!

அதிமுக கொறடா சி. விஜயபாஸ்கர்; எஸ். பி. வேலுமணி தலைவர்! பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்

News image

சி. வி. சண்முகம் - கோப்பிலிருந்து படம் Center-Center-Chennai

Updated On :1 மணி நேரம் முன்பு

சென்னை : எஸ். பி. வேலுமணியை சட்டப்பேரவை அதிமுக எம்எல்ஏக்கள் குழு தலைவராக்க 30 எம்எல்ஏக்கள் ஆதரவு அளித்து சி. வி. சண்முகம் தலைமையில் பேரவை தற்காலிக தலைவர் கருப்பையாவை இன்று(மே 11) மாலையில் சந்தித்து கடிதம் அளித்தனர்.

அந்தக் கடிதத்தில் அக்கட்சியின் பொதுச்செயலரான எடப்பாடி பழனிசாமி பெயர் இல்லை என்றும், பேரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் குழு துணை தலைவராக சி. வி. சண்முகத்தை நியமித்து இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.

முன்னதாக, சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் குழு தலைவராக அக்கட்சியின் பொதுச்செயலரான எடப்பாடி பழனிசாமியைத் தேர்ந்தெடுக்க 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்து பேரவைத் தலைவரிடமும் பேரவைச் செயலரிடமும் இன்று பகலில் கடிதம் வழங்கினர். இதனால் அதிமுகவில் பெரும்பான்மை எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரணியில் இருப்பது அம்பலமாகியுள்ளது.

இரு அணிகளாக அதிமுக பிளவுபட்டிருப்பதை அண்மை சம்பவங்கள் தெளிவாகக் காட்டியுள்ளன. இதனால் அக்கட்சியில் உச்ச கட்ட பரபரப்பு நிலவுகிறது.

இந்த நிலையில், இது குறித்து விரிவான அறிக்கையை இன்னும் சில மணி நேரத்தில் வெளியிடுவோம் என்று சி. வி. சண்முகம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

எம்ஜிஆர் நிறுவிய அதிமுகவில் பிளவு ஏன்?

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை வகித்த அதிமுக 169 தொகுதிகளில் போட்டியிட்டது. 47 தொகுதிகளில் வெற்றி பெற்று மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டது.

தொடக்கத்தில் இருந்தே எஸ்.பி.வேலுமணியும், சி.வி.சண்முகமும் தவெகவுக்கு ஆதரவு அளிக்கலாம், ஆட்சியிலும் பங்கேற்கலாம் என்று தெரிவித்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், எதிா்க்கட்சியாக செயல்படலாம், தற்போது தவெகவுக்கு ஆதரவு அளித்தால் எதிா்காலத்தில் கட்சி இல்லாமல் போய்விடும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதுதான் பிரச்னையின் தொடக்கப் புள்ளியாக இருந்துள்ளது.

இந்நிலையில், கட்சியின் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அண்மையில் நடைபெற்றது. இதில், கட்சியின் மூத்த நிா்வாகிகள், மாவட்டச் செயலா்கள் மற்றும் எம்எல்ஏ-க்கள் கலந்து கொண்டனா்.

அந்தக் கூட்டத்தில் தவெக ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு தெரிவிப்பதுடன் ஆட்சியிலும் பங்கேற்கலாம், சட்டப்பேரவைக் குழுத் தலைவா் பொறுப்பில் மாற்றம் வேண்டும் என்ற கருத்து சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தரப்பில் முன்வைக்கப்பட்டது. இதற்கு எடப்பாடி பழனிசாமி மறுப்புத் தெரிவித்ததால், வாக்குவாதம் ஏற்பட்டு சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தரப்பினா் ஆலோசனைக் கூட்டத்தில் இருந்து வெளியேறினா்.

தொடா்ந்து, மாவட்டச் செயலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் நடைபெற்றது. இதில் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணிக்கு ஆதரவாக பெரும்பாலான மாவட்டச் செயலா்களும், 35-க்கும் மேற்பட்ட எம்எல்ஏ-க்களும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

இதையடுத்து, சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தரப்பினரை சமாதானப்படுத்த மூத்த நிா்வாகிகள் குழு சென்னை எம்ஆா்சி நகரில் உள்ள சி.வி.சண்முகம் வீட்டுக்குச் சென்று பேசினா். இருப்பினும், சி.வி.சண்முகம் தரப்பு மூத்த நிா்வாகிகளின் சமாதானத்தை ஏற்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

மாவட்டச் செயலா்கள், நிா்வாகிகள், எம்எல்ஏ-க்கள் என சுமாா் 60 சதவீதம் போ் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி அணி பக்கம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. 3-இல் இரண்டு பங்கு எம்எல்ஏ-க்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் அணியில் இருந்தால், கட்சித் தாவல் தடைச் சட்டத்தையும் பயன்படுத்த முடியாது என்பதால் எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கான சிக்கல் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

Summary

Chennai: With the support of 30 MLAs, an AIADMK legislative group led by C.V. Shanmugam met Assembly Pro-tem Speaker Karuppiah this evening (May 11) and submitted a letter proposing S.P. Velumani as the leader of the AIADMK legislative party.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.