குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஷுப்மன் கில் - சாய் சுதர்சனின் பார்ட்னர்ஷிப்தான் ஐபிஎல் வரலாற்றின் மிகச் சிறந்த பார்ட்னர்ஷிப் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
தரம்சாலாவில் நாளை (மே 26) நடைபெறும் குவாலிஃபையர் 1 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளன. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிடும்.
இந்த நிலையில், ஷுப்மன் கில் - சாய் சுதர்சனின் பார்ட்னர்ஷிப்தான் ஐபிஎல் வரலாற்றின் மிகச் சிறந்த பார்ட்னர்ஷிப் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: டாடா ஐபிஎல் வரலாற்றில் ஷுப்மன் கில் - சாய் சுதர்சன் இடையேயான பார்ட்னர்ஷிப்தான் மிகவும் சிறந்தது. இந்த இணை 46 இன்னிங்ஸ்களில் 21 முறை 50-க்கும் அதிகமான ரன்களைக் குவித்துள்ளது. ஷுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் இருவருக்கும் ஆட்டம் குறித்த புரிதல் மிகவும் நன்றாக இருக்கிறது. இந்த இணை தொடர்ச்சியாக ரன்கள் குவிக்கிறது. குறைந்த அளவிலான டாட் பந்துகளை இவர்கள் விளையாடியுள்ளனர். சரியான பந்துவீச்சாளர்களை தேர்வு செய்து அவர்களுக்கு எதிராக இந்த இணை அதிரடியாக ரன்கள் குவிக்கிறது. இருவருமே மிகவும் சிறப்பான உடல் தகுதியை பெற்றுள்ளனர் என்றார்.
ஐபிஎல் தொடரில் ஷுப்மன் கில் - சாய் சுதர்சன் இணைக்கு அடுத்தபடியாக, கிறிஸ் கெயில் - விராட் கோலி இணை உள்ளது. அதனைத் தொடர்ந்து, டி வில்லியர்ஸ் - விராட் கோலி இணை மூன்றாவது இடத்தில் உள்ளது. 21 முறை 50 ரன்களுக்கும் அதிகமாக பார்ட்னர்ஷிப் அமைக்க கெயில் - கோலி இணை 59 இன்னிங்ஸ்களும், டி வில்லியர்ஸ் - கோலி இணை 76 இன்னிங்ஸ்களும் எடுத்துக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Suresh Raina has stated that the partnership between Gujarat Titans openers Shubman Gill and Sai Sudharsan is the greatest partnership in the history of the IPL.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிஎஸ்கேவை கிண்டல் செய்து, ஷுப்மன் கில் பகிர்ந்த இன்ஸ்டாகிராம் பதிவு!

நாங்கள் தோல்விக்குத் தகுதியானவர்கள்..! மனம் திறந்த குஜராத் அணியின் கேப்டன் ஷுப்மன் கில்!

ஷுப்மன் கில், சாய் சுதர்சன் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 230 ரன்கள் இலக்கு!

அகமதாபாத் திடலை தனது கோட்டையாக மாற்றிய ஷுப்மன் கில்!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



