கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை அறிக்கை மீனவர்களின் போராட்ட அறிவிப்பால் பதற்றம்: அன்புமணி கேள்வி!புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிர்ப்பு! செப்.29-இல் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!தேசிய விருதைப் பெற்றார் ஜி.வி. பிரகாஷ் குமார்! தமிழ்நாட்டில் 40 நகராட்சி நிர்வாகத் துறை அலுவலகங்களில் சோதனை!ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்

நாங்கள் தோல்விக்குத் தகுதியானவர்கள்..! மனம் திறந்த குஜராத் அணியின் கேப்டன் ஷுப்மன் கில்!

குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் பேட்டி குறித்து...

Gujarat Titans' captain Shubman Gill reacts while leaves the ground after losing his wicket during the Indian Premier League cricket match between Gujarat Titans and Kolkata Knight Riders, in Kolkata , India, Saturday, May 16, 2026. (AP Photo/Bikas Das)

ஆட்டமிழந்து வெளியேறிய ஷுப்மன் கில். - படம்: ஏபி

Published On :

முக்கியமான போட்டியில் கொல்கத்தாவிடம் தோல்வியுற்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுப்மன் கில், “இந்தத் தோல்விக்கு நாங்கள் தகுதியானவர்கள்” எனக் காட்டமாகப் பேசியுள்ளார்.

நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் அணி 247/2 ரன்கள் குவித்தது. அடுத்து விளையாடிய குஜராத் அணி 218/4 ரன்கள் எடுத்து தோல்வியுற்றது.

இந்தப் போட்டியில் ஷுப்மன் கில் சிறப்பாக பேட்டிங் விளையாடி 85 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இருந்தும் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.

இந்தப் போட்டியின் தோல்விக்குப் பிறகு குஜராத் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

இந்த ஆடுகளத்தில் 200-210 ரன்கள் என்பது போதுமானது. ஆனால், நாங்கள் அதிகமான கேட்ச்சுகளை தவறவிட்டோம். ஆடுகளம் நன்றாக இருந்தது. யாரையும் தடுத்து நிறுத்துவது கடினம். நாங்கள் நன்றாகவே பேட்டிங் விளையாடினோம்.

நாங்கள் இன்னும் சிறப்பாக ஃபீல்டிங் செய்திருக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. நாங்கள் சிறந்த அணியாக ஒரு தன்மையை நிருவியிருக்கிறோம். ஆனால், எளிதான 3 கேட்ச்சுகளை தவறவிட்டுள்ளோம். அதனால், இந்த வெற்றி எங்களுக்கு தகுதியானதில்லை. அந்த வகையில் சிறந்த அணியே குவாலிஃபயர் சுற்றுக்குச் செல்லும்.

மீண்டும் அகமதாபாதுக்கு செல்கிறோம். சில நாள்கள் ஓய்வெடுத்து, இதிலிருந்து மீண்டு வரவேண்டும். அங்கு ஆடுகள் எப்படி இருக்கிறதெனப் பார்த்து அதற்கேற்ப திட்டமிட வேண்டும் என்றார்.

Summary

GT captain Shubman Gill says reason for this lose is our fielding

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.