ரூ.18 கோடிக்கு 8 பந்துகள் மட்டுமே வீசி மீண்டும் காயத்தால் வெளியேறிய பதிரானா..! அதிர்ச்சியில் கேகேஆர் நிர்வாகம்!

கேகேஆர் அணியின் பந்துவீச்சாளர் மதீஷா பதிரானா குறித்து...

Kolkata Knight Riders' Matheesha Pathirana leaves the field after retired hurt during the Indian Premier League cricket match between Gujarat Titans and Kolkata Knight Riders, in Kolkata , India, Saturday, May 16, 2026. (AP Photo/Bikas Das)

காயத்தால் வெளியேறிய மதீஷா பதிரானா. - படம்: ஏபி

Published On :17 மே 2026, 12:42 pm IST

ஐபிஎல் மினி ஏலத்தில் ரூ.18 கோடிக்கு வாங்கப்பட்ட வேகப் பந்துவீச்சாளர் மதீஷா பதிரானா வெறுமனே 8 பந்துகள் மட்டுமே வீசி மீண்டும் காயத்தில் போட்டியிலிருந்து வெளியேறினார்.

நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் அணி 247/2 ரன்கள் குவித்தது. அடுத்து விளையாடிய குஜராத் அணி 218/4 ரன்கள் எடுத்து தோல்வியுற்றது.

இந்தப் போட்டியில் மதீஷா பதிரானா களமிறங்கினார். 8 பந்துகள் வீசிய நிலையில் தசைப்பிடிப்பு காரணமாக போட்டியிலிருந்து விலகினார்.

ஏற்கெனவே, பதிரானா காயம் காரணமாக பாதிக்கும் அதிகமான ஐபிஎல் போட்டிகளில் விளையாடாமல் இருந்தார். தற்போது, இந்த சீசனில் முதல் போட்டியிலும் 8 பந்துகளில் காயத்தால் வெளியேறினார்.

சிஎஸ்கே அணியிலும் இதே மாதிரி காயத்தினால் சொதப்பி வந்த பதிரான கொல்கத்தா அணியிலும் செய்வது அவரை ரூ.18 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது தவறான முடிவாகிவிட்டதாக வருந்தி வருவதாக அவர்களது ரசிகர்களே சமூக வலைதளத்தில் புலம்பி வருகிறார்கள்.

கொல்கத்தா அணி 11 புள்ளிகள் பெற்றுள்ளன. மீதமுள்ள 2 போட்டிகளில் வென்றால் 15 புள்ளிகள் பெற்று பிளே ஆஃப் செல்லவும் வாய்ப்பிருக்கிறது.

Summary

Pathirana Exits Again Due to Injury After Bowling Just 8 Deliveries for ₹18 Crore! KKR Management in Shock!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.