கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் மதீஷா பதிரானா (23 வயது) அணியில் இணைந்துள்ளார். முன்னதாக சிஎஸ்கே அணியில் இருந்து இவரை, ரூ.18 கோடிக்கு ஏலத்தில் கேகேஆர் அணி எடுத்தது.
கொல்கத்தாவில் இன்று மதியம் நடைபெறும் ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் பதிரானா களமிறங்குவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.
இலங்கையைச் சேர்ந்த வேகப் பந்துவீச்சாளர் மதீஷா பதிரானா இன்று கொல்கத்தா வந்தடைந்தார். டி20 உலகக் கோப்பையில் காயம் காரணமாக பதிரானா விலகினார்.
சமீபத்தில் அவருக்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் தடையில்லாச் சான்று வழங்கியது. அணியில் இணைந்துள்ள பதிரானா பிளேயிங் லெவனில் இறங்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கேகேஆர் அணி இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் ஒரு வெற்றியைக் கூட பெறாமல், புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. இந்த அணிக்கு பதிரானா மாற்றத்தை அளிப்பாரா என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
Just a reminder, Pathi ghar aa chuke hain ð¥¹ð pic.twitter.com/g0A4Xsk8ty
— KolkataKnightRiders (@KKRiders) April 19, 2026
Summary
Boost for struggling KKR as Pathirana arrives in city
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








