மதீஷா பதிரானாவுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த கேகேஆர்!
காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ள வேகப் பந்துவீச்சாளர் மதீஷா பதிரானாவுக்குப் பதிலாக மாற்று வீரரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

மதீஷா பதிரானா - படம் | ஐபிஎல் (எக்ஸ்)
காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ள வேகப் பந்துவீச்சாளர் மதீஷா பதிரானாவுக்குப் பதிலாக மாற்று வீரரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிட்ட நிலையில், நான்காவது இடத்துக்கு கடும் போட்டி நிலவுகிறது.
பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கு அஜிங்க்யா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் ஒரு வாய்ப்பு இருக்கிறது. ஆனால், அந்த அணியில் காயம் காரணமாக வீரர்கள் சிலர் விலகியது பின்னடைவாக அமைந்தது. காயம் காரணமாக ஆரம்பக் கட்ட போட்டிகளில் விளையாடாமலிருந்த மதீஷா பதிரானா, அணிக்குத் திரும்பினாலும் அவருக்கு மீண்டும் காயம் ஏற்பட்டது. அதனால் அவர் ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார்.
ð¨ News ð¨
— IndianPremierLeague (@IPL) May 24, 2026
Kolkata Knight Riders pick Luvnith Sisodia as a replacement for injured Matheesha Pathirana.
More Details ð½ | #TATAIPL | #KhelBindaas | @KKRiders https://t.co/qTjizFUI17
இந்த நிலையில், காயம் காரணமாக விலகிய மதீஷா பதிரானாவுக்குப் பதிலாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் லவ்னித் சிசோடியா மாற்று வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.
விக்கெட் கீப்பர் பேட்டரான லவ்னித் சிசோடியா இதற்கு முன்பாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடியுள்ளார். உள்ளூர் போட்டிகளில் கர்நாடக அணிக்காக விளையாடி வரும் அவர், 15 போட்டிகளில் 124 ரன்கள் எடுத்துள்ளார்.
மதீஷா பதிரானாவுக்குப் பதிலாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் லவ்னித் சிசோடியா ரூ. 30 லட்சத்துக்கு இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
The Kolkata Knight Riders management has announced a replacement player for fast bowler Matheesha Pathirana, who has withdrawn from the IPL tournament due to injury.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





