இலங்கையை சுழற்றிய சுதர்: முதல் டெஸ்ட்டில் இந்தியா அபார வெற்றிஇடதுசாரிகள் போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்க தடை உத்தரவு வாபஸ்! தமிழ்நாடு முழுவதும் நாளை போராட்டம்: இந்திய மாணவர் சங்கம் அறிவிப்புஊழல் ஆதாரங்களை தேவையான நேரத்தில் வெளியிடுவோம்! முதல்வர் விஜய்ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வுஎம்.எல்.ஏக்களுக்கு அரசு சார்பில் கார்: முதல்வர் விஜய் அறிவிப்பு
/

உப்புக்கு பதிலாக சோப்பு பவுடர்! சத்துணவில் சாப்பிட்ட 40 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி!

பள்ளி சத்துணவில் உப்புக்கு பதிலாக சோப்பு பவுடர் வழங்கப்பட்டது பற்றி...

News image

சத்துணவில் சாப்பிட்ட 40 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி - x

Updated On :19 ஆகஸ்ட் 2026, 1:32 pm IST

பிகார் அரசுப் பள்ளி சத்துணவில் மதிய உணவு சாப்பிட்ட 40 குழந்தைகள் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பிகார் மாநிலம், நாளந்தா மாவட்டம், பாரசி என்ற பகுதியில் நடுநிலைப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 40-க்கும் மேற்பட்ட குழந்தைகள் வயிற்று வலி மற்றும் வாந்தியால் பாதிக்கப்பட்டனர்.

சத்துணவை ஆய்வு செய்ததில் உப்புக்கு பதிலாக தவறுதலாக சோப்பு பவுடர் உணவில் போடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட அனைத்து மாணவ, மாணவிகளும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தகவல் அறிந்ததும் மருத்துவமனையில் குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் குவிந்ததால் பதற்றமான சூழல் நிலவியது.

இந்த சம்பவத்தை அறிந்த பிகார் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஷ்ரவன் குமார் மருத்துவமனைக்கு நேரில் வருகை தந்து பாதிக்கப்பட்ட மாணவர்களையும், பெற்றோர்களையும் சந்தித்தார்.

பள்ளி ஆசிரியர்களிடம் காவல்துறை அதிகாரிகள் நடத்திய முதல்கட்டத் விசாரணையில், மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட சோயா பீன்ஸ் உணவில் உப்பு மிகவும் குறைவாக இருந்ததால், தேவைப்படும் மாணவர்களுக்கு தனியாக உப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த சமயத்தில் உப்புக்கு பதிலாக தவறுதலாக சோப்பு பவுடர் வழங்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இதையடுத்து பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்படும் உணவில் கவனக் குறைவால் சோப்பு பவுடர் கலக்கப்பட்டது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

Summary

Soap powder instead of salt! 40 children hospitalized after eating nutritious meal!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.