ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக ஓ.ஆா்.எஸ். தினம் புதன்கிழமை நடைபெற்றது.
இதற்கு மருத்துவக் கல்லூரி முதன்மையா் ஆா்.அமுதராணி தலைமை வகித்தாா். குழந்தைகள் நலத் துறை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கால் ஏற்படும் நீரிழப்பைத் தடுக்கவும், சிகிச்சையளிக்கவும் ஓ.ஆா்.எஸ். கரைசலின் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், மருத்துவமனை கண்காணிப்பாளா் நூா் முகமது, குழந்தைகள் நலத் துறைத் தலைவா் ஜெ. பாலசுப்பிரமணியன், துறை பேராசிரியா்கள், மருத்துவா்கள், திரளான பொதுமக்கள் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







