புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

பேரவைக்கு ஆட்டோவில்தான் வருகிறேன்! முதல்வர் விஜய்யை திரும்பி பார்க்க வைத்த எம்.எல்.ஏ.!

தவெக எம்.எல்.ஏ. சபரி ஐங்கரன் பேச்சை முதல்வர் விஜய் திரும்பிப் பார்த்தது பற்றி...

cm vijay

முதல்வர் விஜய்யை திரும்பி பார்க்க வைத்த எம்.எல்.ஏ. - tn assembly

Published On :

தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு நாள்தோறும் ஆட்டோவில்தான் வருகிறேன் என்று தவெக எம்.எல்.ஏ. சபரி ஐங்கரன் புதன்கிழமை தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி எண் 110-ன்கீழ் முதல்வர் ஜோசப் விஜய் இன்று காலை பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் வாகனம் வழங்கப்படும் என்றும், வாகன ஓட்டுநர், எரிபொருள், வாகன பராமரிப்புக்கு மாதந்தோறும் ரூ. 75,000 வாகனப்படியாக வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், எம்.எல்.ஏக்கள் தங்களது தொகுதி சார்ந்த பல்வேறு பணிகளை மேற்கொள்ள ஏதுவாக ஒரு உதவியாளரை நியமித்துக் கொள்ள ரூ. 25,000 உதவியாளர்படியாக வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

இந்த அறிவிப்புகளுக்கு நன்றி தெரிவித்து சட்டப்பேரவை உறுப்பினர்கள் பேசினார். அப்போது பெரியகுளம் தவெக எம்.எல்.ஏ. சபரி ஐங்கரன் பேசியதாவது:

”சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு கார் வழங்கியுள்ள முதல்வருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரேவொரு விஷயம் நகைச்சுவைக்காக சொல்கிறேன். கல்லூரி படிக்கும்போது காதல் தோல்வி ஏற்பட்டது. வேலையும் இல்ல, காரும் இல்ல. இன்று இரண்டையும் முதல்வர் கொடுத்துள்ளார்.

நான் ரயிலில் வருகிறேன், அங்கிருந்து ஆட்டோவில் பேரவைக்கு வரும்போது, ஒவ்வொரு முறையும் காவலர்கள் யார் என்று கேட்பார்கள். எம்.எல்.ஏ. எனக் கூறி அடையாள அட்டையைக் காண்பித்தாலும் நம்ப மாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.

அவர் பேசுகையில் தனது இருக்கைக்கு பின்னால் உள்ள மேல் வரிசையில் நின்று பேசிக் கொண்டிருந்த எம்.எல்.ஏ. சபரி ஐங்கரனை முதல்வர் விஜய் திரும்பிப் பார்த்தார்.

இதனால் பேரவையில் லேசான சிரிப்பலை ஏற்பட்டது.

Summary

"I come to the Assembly only by auto!" — The MLA who made Chief Minister Vijay turn and take notice!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.