குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் அகமதாபாத் திடலில் போட்டி வந்தாலே ரன்களை குவிக்கிறார். நேற்றைய போட்டியில் 86 ரன்களை எடுத்து ஆட்ட நாயகன் விருது வென்றார்.
குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 180 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து விளையாடிய குஜராத் 19.4 பந்துகளில் 181/5 ரன்கள் எடுத்து வென்றது.
இந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் 50 பந்துகளில் 86 ரன்களை எடுத்து ஆட்ட நாயகன் விருது வென்றார்.
இந்த சீசனில் 3 போட்டிகளில் தொடர்ச்சியாக அரைசதம் அடித்துள்ளார். அதிக ரன்கள் குவித்துள்ளதால், ஆரஞ்ச் கேப்பையும் வென்றுள்ளார்.
ஐபிஎல் போட்டிகளில் மட்டுமல்லாமல் இந்தியாவுக்காக விளையாடும்போதும் ஷுப்மன் கில் டி20, ஒருநாள், டெஸ்ட் போட்டிகளில் அந்தத் திடலில் சதம் அடித்து அசத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
ð£ï¸ð£ï¸ ðð©'ð¨ ðð¡ð¡ ððð¤ðªð© ð©ð§ð®ðð£ð ð©ð¤ ð¨ð©ðð® ðð£ ð©ðð ð¥ð§ðð¨ðð£ð©
— IndianPremierLeague (@IPL) April 17, 2026
Current orange cap holder Shubman Gill after scoring his 3â£rd consecutive half-century of the season ð«¡ð§¢
Scorecard â¶ï¸ https://t.co/FACeUzse3B#TATAIPL | #KhelBindaas | #GTvKKR |⦠pic.twitter.com/s0AksUZn1N
ஐபிஎல் போட்டிகளில் அகமதாபாத் திடலில் மட்டுமே ஷுப்மன் கில் இதுவரை 1,243 ரன்கள் எடுத்துள்ளார். ஸ்டிரைக் ரேட் 162. 69 ஆகவும் சராசரி 54. 04ஆகவும் இருக்கின்றன.
இந்த அகமதாபாத் திடலில் மட்டுமே 6 அரைசதங்கள், 3 சதங்கள் அடித்து அசத்தியுள்ளார். அகமதாபாத் திடலை ஷுப்மன் கில் தனது கோட்டையாக மாற்றியுள்ளார்.
Shubman Gill ð¤ Ahmedabad
— IndianPremierLeague (@IPL) April 17, 2026
A match made in heaven for @gujarat_titans and #TATAIPL fans ð¤©#KhelBindaas | #GTvKKR pic.twitter.com/IWgHDJSZxO
Summary
Shubman Gill and Ahmedabad A match made in heaven
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










