விஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி பிரதமர் மோடி சென்ற பாதையில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுப்பு: 6 காவலர்கள் பணியிடை நீக்கம்தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை: அண்ணாமலைஎண்ணெய் வணிக நிறுவனங்கள் நஷ்டத்தை மட்டுமே பகிர்கின்றன: மாணிக்கம் தாகூர் தங்கம் விலை உயர்வு! எவ்வளவு?
/

பெங்களூரில் முகாமிடும் காங்கிரஸ் தகவல் தொடர்புக் குழு: பிரசாரத்தை தீவிரப்படுத்தத் திட்டம்

பெங்களூரில் முகாமிடவிருக்கும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தகவல் தொடர்புக்குழு, தனது பிரசாரத்தை தீவிரமாக்க திட்டமிட்டுள்ளது.

News image
Updated On :18 ஏப்ரல் 2018, 9:50 am IST

பெங்களூரில் முகாமிடவிருக்கும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தகவல் தொடர்புக்குழு, தனது பிரசாரத்தை தீவிரமாக்க திட்டமிட்டுள்ளது.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அறிவித்துள்ள காங்கிரஸ், அடுத்தக்கட்டமாக பிரசாரத்தில் கவனம் செலுத்தத் திட்டமிட்டுள்ளது. புதுதில்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தகவல்தொடர்பு மற்றும் சமூகவலைத்தளக் குழு, அடுத்த ஒரு மாதத்தில் பெங்களூரில் முகாமிட்டு தேர்தல் பிரசாரத்தை முடுக்கிவிட திட்டமிட்டுள்ளது. 
குஜராத் மாநிலத்தில் மேற்கொண்ட இதுபோன்ற முயற்சிக்கு கைமேல் பலன் கிடைத்ததால், அதையே கர்நாடகத்திலும் செயல்படுத்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முடிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தகவல் தொடர்புக் குழுவின் பொறுப்பாளர் ரந்தீப்சிங் சுர்ஜேவாலா, அமைப்பாளர் பிரியங்கா சதுர்வேதி, தேசிய ஊடக ஒருங்கிணைப்பாளர் சஞ்சீவ்சிங் உள்ளிட்டோர் தமது குழுவினருடன் பெங்களூருக்கு வந்துள்ளனர். 
இந்தகுழு, கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டியின் தகவல்தொடர்பு மற்றும் சமூக வலைத்தளக் குழுவுடன் ஒருங்கிணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளது. இந்த பிரசாரக் குழுவின் தலைமை பொறுப்பை ஏற்றிருக்கும் சுர்ஜேவாலா, தேர்தல் பிரசார திட்டம், வியூகம் மேம்படுத்துவது, செய்தித் தொடர்பாளர்களின் தினசரி செயல்பாடுகளை முடிவுசெய்வது, தொலைக்காட்சிகளில் பேசுவதற்கான ஆட்களை அனுப்பிவைப்பது, பத்திரிகையாளர் சந்திப்புகளை நடத்துவது, ஊடகங்களுக்கு தகவல்களை அனுப்புவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளவிருக்கிறார்.
பிரியங்கா சதுர்வேதி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர்களை கர்நாடகத்துக்கு வரவழைத்து பிரசார பயணங்களைத் திட்டமிட்டு வழங்கவிருக்கிறார். ஊடக சந்திப்புகள், பேட்டிகளுக்கும் இவர் ஏற்பாடு செய்யவிருக்கிறார். சமூகவலைத்தளங்கள், ஊடகங்களின் ஒருங்கிணைப்புப் பணியை சஞ்சீவ்சிங் கவனிக்கவிருக்கிறார். 
கர்நாடகத்தைச் சேர்ந்த பிரபல நடிகை திவ்யா ஸ்பந்தனா, இந்த குழுவில் முக்கியமான பங்களிப்பை வழங்கவிருக்கிறார். இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறுகையில், "குஜராத் தேர்தலில் இருந்து பலவற்றை கற்றுக்கொண்டோம். குஜராத்தில் ஓரளவு வெற்றியை பெற்றதற்கு தகவல் தொடர்பு மற்றும் பிரசார வியூகமும் முக்கிய காரணமாகும். அங்கு ஒருசில குறைகள் கண்டறியப்பட்டது.அதை கர்நாடகத்தில் சரிசெய்துகொள்வோம். இம்முறை உள்ளூர் ஊடகங்கள், தொலைக்காட்சிகளை கன்னடத்திலேயே அணுகுவோம். தகவல்தொடர்புகள் அனைத்தும் கன்னடம், ஆங்கிலம், ஹிந்தியில் இடம்பெறும்' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.