வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்களால் வாக்களிக்க முடியுமா? தேர்தல் ஆணையம் விளக்கம்

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் வாக்களிக்க மாற்று ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 2:40 am

DIN

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் வாக்களிக்க மாற்று ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.
இதுகுறித்து கர்நாடக மாநில தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மக்கள் பிரதிநிதித்துவ சட்டம்,1951 பிரிவு 61-இன்படி வாக்களிப்பதற்கு முன்பாக தங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்த வாக்காளர்கள் அனைவரும் புகைப்பட வாக்காளர் அடையாள அட்டையை காட்ட வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.  இந்நிலையில், புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள் மாற்று அடையாள அட்டையை கொண்டுவர தேர்தல் ஆணையம் வழிகாட்டுதல் வழங்கியுள்ளது. அதன்படி வாக்காளர்கள் கொண்டுவர வேண்டிய 12 மாற்று அடையாள அட்டைகள்: 
1) கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்), 2) ஓட்டுநர் உரிமம், 3) மத்திய, மாநில அரசுகள், அரசு நிறுவனங்கள் ஊழியர்களுக்கு அளித்துள்ள புகைப்பட அடையாள அட்டை, 4) பொதுத்துறை வங்கிகள், அஞ்சலகங்களின் பாஸ்புக், 5) வருமானவரி அடையாள(பான்) அட்டை, 6) தேசியமக்கள் தொகை பதிவேட்டின்கீழ் மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலகம் அளித்துள்ள ஸ்மார்ட் அட்டை, 7) மகாத்மாகாந்தி தேசிய ஊரகவேலை உறுதி திட்டத்தின் வேலை அட்டை, 8) தொழிலாளர் துறை வழங்கியுள்ள சுகாதார காப்பீட்டு அட்டை, 9) புகைப்படத்துடன்கூடிய ஓய்வூதிய ஆவணம், 10) தேர்தல் ஆணையம் அளித்துள்ள புகைப்பட வாக்காளர் சீட்டு, 11) எம்பிக்கள், எம்எல்ஏக்கள், எம்எல்சிக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை, 12) ஆதார் அட்டை. 
புகைப்பட வாக்காளர் அட்டையில் ஏதாவது எழுத்துப்பிழை இருந்தால் அதை பொருள்படுத்தாது வாக்களிக்க வாய்ப்பளிக்கப்படும். பிற தொகுதிகளில் அளித்த புகைப்பட வாக்காளர் அடையாள அட்டையை காண்பித்தாலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றிருக்காவிட்டால் அதை அடையாள அட்டையாக கருதமுடியாது. வெளிநாடுவாழ் இந்தியர்கள் அசல் கடவுச்சீட்டை கொண்டுவந்தால் மட்டுமே ஏற்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.