ஆசிய பாரா விளையாட்டு: பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! சமையல் கலைஞர் செஃப் தாமு காலமானார்!அதி தீவிர புயலாகக் கரையைக் கடக்கும் ’அர்னாப்’: வானிலை ஆய்வு மையம் தகவல்!

"ஆண்களுக்கு இணையாக பெண்கள் சமத்துவம் பெற வேண்டும்'

ஆண்களுக்கு இணையாக பெண்கள் சமத்துவம் பெற வேண்டும் என்று கூடைபந்து வீராங்களை பவித்ரா சந்திரன் தெரிவித்தார்.

Updated On :

ஆண்களுக்கு இணையாக பெண்கள் சமத்துவம் பெற வேண்டும் என்று கூடைபந்து வீராங்களை பவித்ரா சந்திரன் தெரிவித்தார்.
கொச்சியில் இருந்து தில்லி வரை மோட்டார் சைக்கிளில் 20 நாள்களில் பயணம் மேற்கொண்டுள்ள 6 பெண்கள் பெங்களூருக்கு சனிக்கிழமை வருகை தந்தனர்.  பெடரல் வங்கி சார்பில் இவர்களை வரவேற்கும் நிகழ்ச்சியில் பவித்ரா சந்திரன் பங்கேற்று பேசியது:-
பெண்கள் முன்னேற்றம், சமத்துவத்தைக் கருத்தில் கொண்டு  பெண்களும் மோட்டார் சைக்கிளில் கொச்சின் முதல் தில்லி வரை 20 நாள்கள் பயணம் மேற்கொண்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. 
பெண்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. அவர்கள் உறுதியானவர்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த மோட்டார் சைக்கிள் பயணம் அமைந்துள்ளது. அனைத்துத் துறைகளிலும் ஆண்களுக்கு இணையாக பெண்கள் சமத்துவம் பெற வேண்டும். 
விளையாட்டிலும் பெண்கள் அதிக அளவில் முன்னேற வேண்டும். மறைந்த அப்துல் கலாம் கூறியதைப்போல, இலக்கை நிர்ணயித்து, அதை அடைவதற்கான அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். எந்த சூழலிலும் அதனை விடாமல் தொடர்ந்து, கடினமாக உழைத்து நமது இலக்கை சென்றடைய வேண்டும். 
எனவே பெண்கள் அனைவரும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் வெற்றியை நோக்கி பயணிக்க வேண்டும்.  ஆண்களுக்கு இணையாக பெண்கள் சமுத்துவம் பெற வேண்டும் என்றார் பவித்ரா சந்திரன்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.