கர்நாடக முன்னாள் அமைச்சர் திப்பேசாமி புதன்கிழமை பெங்களூரு தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
சித்ரதுர்கா செல்லுகெரே வட்டம், காட்டப்பனஹட்டிய சேர்ந்தவர் முன்னாள் அமைச்சர் திப்பேசாமி (76). இவர் சித்ரதுர்கா மாவட்டம், செல்லுகெரே சட்டப்பேரவைத் தொகுதியில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டு, மஜத ஆட்சியில் தேவெ கெளடா, ஜே.எச்.பாட்டீல் ஆகியோரின் அமைச்சரவையில் சிறிய நீர்ப்பாசனத் துறை, கலால் துறை அமைச்சராகப் பணியாற்றினார்.
பின்னர் பாஜகவில் இணைந்து ஜகலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்று, எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராகப் பணியாற்றினார். கடந்த சில நாள்களாக உடல் நலம் குன்றியதையடுத்து பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். புதன்கிழமை காலை அவர் காலமானார். அவருக்கு மனைவி விமலம்மா, மகன் குமாரசாமி, மகள் பவ்யா ஆகியோர் உள்ளனர். திப்பேசாமியின் மறைவுக்கு முன்னாள் பிரதமர் தேவெ கெளடா, எதிர்க்கட்சித் தலைவர் எடியூரப்பா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரஷியா மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: 12 பேர் பலி

ஐசிஎல் ஃபின்கார்ப் நிறுவனத்தின் கடன் பத்திரங்கள் அறிமுகம்!

ஜார்க்கண்ட் போராட்டம் பற்றிப் பேசாமல் இரட்டை வேடம் போடும் ராகுல் காந்தி: பாஜக கண்டனம்!

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்! தனித் தீர்மானம் நிறைவேற்றம்! | TN Assembly | TVK
விடியோக்கள்

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்! தனித் தீர்மானம் நிறைவேற்றம்! | TN Assembly | TVK


