பரந்தூர் திட்டத்தைக் கைவிடுவது அரசுக்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும்! உதயநிதிபள்ளிகளுக்கு 3 வகையான ஸ்டிக்கர் ஒட்டப்படும்: ஆதவ் அர்ஜுனா பேச்சுகொளத்தூர் தொகுதியில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு! பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

காமராஜர் தமிழ்ப் பள்ளியில் சுதந்திர தின விழா

பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் காமராஜர் தமிழ் உயர்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

Published On :30 ஜனவரி 2024, 10:01 pm IST

பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் காமராஜர் தமிழ் உயர்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
பெங்களூரு வெங்கடேஷ்புரத்தில் உள்ள பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் காமராஜர் தமிழ் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு சங்கத் தலைவர் தி.கோ.தாமோதரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கோ.தாமோதரன், செயலாளர் இராம.சுப்ரமணியன், துணைச் செயலாளர்கள் அமுதபாண்டியன்,சுரேஷ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் என்.ராமசந்திரன், மணிகண்டன், கார்த்தியாயினி, பழனிச்சாமி முன்னிலை வகித்தனர்.
தொழிலதிபர் பாலசுந்தரம் தேசியக்கொடியை ஏற்றிவைத்தார். பள்ளி தாளாளர்  பொன்.க.சுப்பிரமணியன் அனைவரையும் வரவேற்றார். இதைத் தொடர்ந்து, பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், அணிவகுப்பு, யோகா செய்முறை நிகழ்த்தப்பட்டது. 
சிறப்பு விருந்தினர்களான கமலாதேவி, கிருஷ்ணவேணி, ராதாகிருஷ்ணன், தங்கம் இராமசந்திரன் ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு , கைத்தறித் துண்டுகளை அளித்தனர். பிரபாவதி பிரேம்குமார், வெற்றிச்செல்வன் ஆகியோர் 8,9,10-ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற 6   மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கினார். பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சரவணன்,கோபி, சிவக்குமார் ஆகியோர் பள்ளிவளர்ச்சிக்கு நிதி வழங்கினர். 
நிகழ்ச்சியில் கேரள மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சங்க செயற்குழு உறுப்பினர் என்.ராமசந்திரன், நிவாரணப் பொருள்களை வழங்கினார். நிறைவாக, பள்ளி தலைமை ஆசிரியர் ஆசீர்வாதம் நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.