கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புஎம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவுவீடுகளில் எல்பிஜிக்கு பதிலாக குழாய்வழி சமையல் எரிவாயு: மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க மத்திய அரசு வலியுறுத்தல்எத்தனால் உற்பத்தி அதிகரிப்பால் சா்க்கரை விலை உயா்வு: மத்திய அரசு மீது மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டுஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: விசா சிக்கல்களுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள்!

பிரதமராகும் தகுதி மல்லிகார்ஜுன கார்கேவுக்கு உண்டு: முன்னாள் அமைச்சர் பசவராஜ்ராய ரெட்டி

நாட்டின் பிரதமராகும் தகுதி மல்லிகார்ஜுன கார்கேவுக்கு உள்ளது என்று கர்நாடக முன்னாள் அமைச்சர் பசவராஜ்ராயரெட்டி தெரிவித்தார்.

Published On :30 ஜனவரி 2024, 10:08 pm IST

நாட்டின் பிரதமராகும் தகுதி மல்லிகார்ஜுன கார்கேவுக்கு உள்ளது என்று கர்நாடக முன்னாள் அமைச்சர் பசவராஜ்ராயரெட்டி தெரிவித்தார்.
பெங்களூரில் அவர் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:-
மக்களவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக தான் அறிவிக்கப்படப் போவதில்லை என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அப்படியானால், நாட்டின் பிரதமராகும் தகுதி மக்களவை காங்கிரஸ் குழுத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு உள்ளது. அந்த பதவி அவருக்கு கிடைத்தால் திறம்பட செயல்படுவார். 
மல்லிகார்ஜுனகார்கேவின் திறமையை அறிந்துகொண்டுள்ளதால் தான், அவருக்கு பிரியாவிடை கொடுக்கவிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருக்கிறார். திறமைவாய்ந்த தலைவர்களை குறிவைத்து பாஜக தாக்கத் தொடங்கியுள்ளது. மல்லிகார்ஜுன கார்கே எதிர்காலத்தில் பிரதமராகும் தகுதிபடைத்தவர் என்பதால் தான் அவரை பாஜக கடுமையாக விமர்சிக்க தொடங்கியுள்ளது. 
குடகு உள்ளிட்ட பல மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டு, மக்களின் வாழ்க்கை சீர்கெட்டுள்ளது. வெள்ள நிவாரணப் பணிகளைச் செயல்படுத்துவதில் நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்துகொண்டுள்ளது. தேசிய பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து குடகு மாவட்டத்துக்கு மத்திய அரசு ரூ.3 ஆயிரம் கோடியை ஒதுக்க வேண்டும். கர்நாடகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள், மத்திய அரசிடம் இருந்து அதிகப்படியான வெள்ளநிவாரண நிதியை பெற்றுத் தர முயற்சிக்கவேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.